பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

அகநானூறு - மணிமிடை பவளம்



நின் பழைய அழகுநலம் எல்லாம் சிதைந்து போகுமாறு நீ வருந்தியவளாக இருக்கின்றனை. நாள்தோறும், இன்னமும் அவர் வந்திலரே! இனி யான் என் செய்வேனோ? என்று பெரிதும் புலப்பம் கொண்டவளுமாயினை. அவற்றையெல்லாம் இனியேனும் விட்டு விடுவாயாக.

என்று, பிரிவிடை வேறுபட்டாளான தலைமகளைத் தோழி ‘அவன் விரைந்து வருவான்’ எனக்கூறி வற்புறுத்தினாள் என்க.

சொற்பொருள்: 1. தொல் நலம் - அவள் காதலன் பிரிந்து செல்வதற்கு முன்னர்விளங்கிய பழைய அழகு சாஅய் வருந்தி. அல்கலும் நாள்தோறும், 3. புலம்பு - புலப்பம். 4. இரும்பிடி - பெரிய பிடியானை, கரிய பிடியானையுமாம். 5. வெறி - நறு நாற்றம். 6. காண்பின் காண்பதற்கு இனிய 7 வழை - சுரபுன்னை. 8. ஏகல் - பெருகிய கற்கள்; அதாவது கற்கள் மலிந்துள்ள. 10. கமஞ்சூல்-நிறைசூல்; முதற்குலும் ஆம்13. வல்லே - விரைவாக 18. தகை பெற தகுதி பெறும்படியாக

விளக்கம்: பாகலின் செங்கனியை உண்ணுதற்கு விருப்பங் கொண்டு, ஊது கொம்பினைப்போல அகவிக் கொண்டிருக்கும் மயிலினைக் காண்பவர், நின்னுடைய நினைவுவரப் பெறாமல் போவாரோ? தம் கையால் நன் கூந்தலிலே பூச்சூடுதலையும், நின் மார்பின் தேமல்கள் மறையத் தொய்யில் வரை தலையும் நினையாரோ? நினைவார்; ஆதலின் விரைந்து வருவார். என்றனள்.

பாடபேதங்கள்: பாடியவர் பெயர், செல்லூர் இளம் பொன் சாத்தன் கொற்றன் எனவும், உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தன் கொற்றன் எனவும் கூறப்படும். 20. சுணங்கிடை’, ‘சுணங்கடை எனவும் வழங்கும்.

178. என்றும் பிரியாது வாழ்க!

பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி. துறை: தோழி வரைவு மலிந்து சொல்லியது.

(தலைவனும் தலைவியும் இரவுக்குறியிலே ஒழுகி வருகின்றனர். தலைவியும் குறியிடத்தே தன் காதலனின் வரவு நோக்கிக் காத்திருக்கின்றாள். உடன் இருக்கும் தோழியோ, இவர்களைத் திருமண உறவிலே பிணிக்க வேண்டும் என்று கருதுகிறாள். தலைவன் வரைதல் எண்ணமுடன் வந்த ஒதுங்கியிருத்தலை அறிந்து, தலைவிக்குச் சொல்பவள் போலத், தலைவன் கேட்கும்படியாக வரைவுமலிந்து உரைக்கின்றாள்.)