பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/329

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

அகநானூறு - மணிமிடை பவளம்


அதனுடன் புலியொன்று போரிட்டது. அதனால், குழைவுற்ற புழுதிபட்டுக் கிடந்த இடமும், தன் புலால் நாற்றத்தினின்றும் நீங்குமாறு, நிறம்பொருந்திய வேங்கை மலர்களின் மிகுதியான மாறு, நிறம்பொருந்திய வேங்கை மலர்களின் மிகுதியான நறுமணமானது, மல்லிகைமலரின் நாற்றத்தோடு கலந்து கமழ்ந்து கொண்டிருக்கும். அத்தகைய, சிறந்த மலைக்கு உரியவனான தலைவனோடு, குற்றம் ஏதும் இல்லாததாகிய காமம் கலந்த காதல் நினைவு நினக்கும் உளதென்றால், அது மிகவும் நன்மை தருவதேயாகும். அதனை, நீ நாடிச் செல்லா திருக்கின்றனையே அது ஏனெனக் கூறுவாயாக

இனிய உயிர் போன்றவளான நின்னோடும் கலந்து ஆராயாது, முளைகள் அழகுசெய்யும் மூங்கிலைப்போலப் பெரிதான சுற்றத்தாருடன், பொலிவுற்ற பெரும்புகழ் மேவிய நம் தந்தையின் அரிய காவலைக்கடந்து சென்று, செய்து பின் அதற்காக வருத்தப்படாத நல்ல செயலைச் செய்தமையால், உண்மையல்லாத பொய்ம்மை குழ்ந்த ஊரவர் கூறும் பெரும் பழிச்சொற்களையும் யானே பெற்றுள்ளேன்.

இந்த உலகத்திலே, நாணமும் நட்பும் இல்லாத ஒருவரை ஆராய்ந்து காணத் தொடங்கினால், அதற்குப் பொருந்துபவர் என்னையன்றி வேறு யாருமே இலர்;

என்று, குறைவேண்டிப் பின்னிற் தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி, தலைமகட்குக் குறைநயப்பக் கூறினாள் என்க.

சொற்பொருள்: 1. அறியாய் - அறிந்து பாராயோ? 2. பூநுதல் - அழகிய நுதல். குழைந்த புழுதிபட்ட 3. செங்களம் சிவப்பான இடம் புலவி - புலால் நாற்றம். 4. குளவி - மல்லிகை விலங்கும் - அகற்றும். 6. காமல் கலந்த காதல் - உள்ளம் ஒன்று கலந்து. உடல் ஒன்று சேரத் துடிக்கும் வேட்கை 7 நாடாய் நாடினாயல்லை. 12. இரங்கா - வருந்தாத

விளக்கம்: நாணமும்விட்டுச் சுற்றத்தாரின் காவலையும் கடந்து சென்று, தலைவனைச் சந்தித்து, அவனுக்குத் தலைவியை இயைவிப்பதாகக் கொடுத்த உறுதியை நினைந்தே, நானும் நட்பும் இழந்தவளாகவும், பெரும்பழி எய்தினவளாகவும் தோழி கூறுகிறாள். எனினும், தான் செய்தது முறையான செயல் என்பதனால் வருந்தாதிருப்பதையும் புலப்படுத்தச், ‘செய்துபின் இரங்கா வினையொடு’ என்கின்றாள் - தலைவியும், தோழியுடைய இந்தப் பேச்சைக் கேட்டுத் தலைவனுடன் தானும்