பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

101


9. -(2) ஒட உதவும் சாதனங்களை தேவையான ஆணிகள் கொண்டு ஒட்டப் பாதையின் தரை பழுது பட்டுப் போகாதவாறு, பதித்துக்கொள்ளலாம். அதாவது, பதிக்கப் பெற்ற உதவி சாதனத்தை எளிதாகவும் விரைவாகவும் வெளியே எடுக்கும் வண்ணம் பதித்திட வேண்டும்.

சாதனத்தைப் பதிக்க உதவும் ஆணிகளின் எண்ணிக்கை கனம், நீளம், இவையெல்லாம் ஒட்டப்பாதை அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பைப் பொறுத் து வைத்துக்கொள்ளலாம்.

9. - (3) ஒரு ஒட்டக்காரர் தனக்கு சொந்தமான ஒட உதவும் சாதனத்தைப் பயன்படுத்த விரும்பினால், அது வித முறைகளுக் குட் பட் டு செய்யப் பட்டதாக அமைந்திருத்தல் வேண்டும்.

(மேலே உள்ள 1, 2ம் விதிகளைக் காண்க)

ஒட உதவும் சாதனங்கள் எந்த விதமான அமைப்பிலும் வடிவத்திலும் அமைக்கப்படலாம். ஆனால், அவை மற்ற ஒட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கக் கூடாது.

9. (4) போட்டியை நடத்துபவர்கள் ஒட உதவும் "தனங்களை ஒட்டக்காரர்களுக்கு வழங்கினாலும், அவையும் மேலே குறிப்பிட்டடுள்ள விதிமுறைகளுக்கேற்பவே சீமைந்திருக்க வேண்டும்.

ஒட உதவும் சாதனம் ஒன்றில், இரண்டு பாதப்பபட்டைகள் (Footplate) அவற்றின் மீது ஒட்டக்காரரின்