பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்



அ) உயரக் கம்பங்களை அல்லது குறுக்குக் கம்பத்தை இடித்து வீழ்த்திவிடுகிற பொழுது;

ஆ) கோலூன்றும் பெட்டியில் கோலினை ஊன்றி, மேலே எழும்பித் தூண்டுகிற முயற்சியில் தரையை விட்டு, கால்களை மேலே உயர்த்தி விடுகிறபொழுது;

இ) ஆ பிரிவில் கூறியபடி, கால்களை தரையை விட்டு மேலே உயர்த்திய பிறகு, கோலைப் பிடித்திருக்கும் கீழ்க்கைப் பிடியை (Lowerhand) மேல்கைக்கு மேற்புறமாக உயர்த்துகிற பொழுது அல்லது மேலே பிடித்திருக்கும் மேல் கையை (upper hand) இன்னும் கோலுக்கு மேலே உயர்த்திப் பிடிக்கிறபொழுது;

ஈ) குறுக்குக் கம்பத்தைத் தாண்ட எடுக்கும் முயற்சியில், கோலினைக் குறிப்பிட்ட பெட்டிக்குள் ஊன்றாமல், பெட்டிக்கு மேற்புறமாகக் கோலை நீட்டி விடுகிறபொழுது; அல்லது தனது உடல் உறுப்புக்கள் ஏதாவது ஒன்றால், அல்லது தான் பிடித்திருக்கும் கோலால், தாண்டி விழும் பரப்பளவுக்குள் (Landing Area) தொட்டுவிடுகிற போது அவர் தவறிழைக்கிறார் அல்லது ஒரு வாய்ப்பினை இழந்து போகிறார்.

10. கோலூன்றும் பெட்டிக்குள் கோலினை ஊன்றி மேலெழும்பித் தாண்டுகிற முயற்சியின் போது, தாண்ட உதவும் கோல் முறிந்துவிட்டால், அந்த வாய்ப்புத் தவறில்லை என்று கூறி, மீண்டும் ஒரு வாய்ப்பு அவருக்கு அளிக்கப்படும்.