பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

சாஸனங்கள்

5.பிராணி இம்சை நிவாரணம்

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இவ்விதம் கூறுகிறான். நான் முடிசூடி இருபத்தாறு வருடங்களான பிறகு இந்த ஜீவ ஜந்துக்கள் வதையிலிருந்து தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அவை யாவன :---- சுகம் (கிளி), சாரிகை, அருணம் (யானை), சக்கரவாகம், ஹம்ஸம் (அன்னம்), நந்தீமுகம், கெலாடம், ஜதூகம் (வௌவால்), அம்பாகபீலிகம் (சினை எறும்பு), துடி (ஆமை), அனஷ்திகமச்சம் (எலும்பில்லாத மீன்), வேதவேயகம், கங்காபுபூடகம், ஸங்குஜமச்சம், கபடஸயகம் (ஆற்று ஆமை), பம்னஸலம் (முள்ளம்பன்றி), ஸ்ரிமரம் லண்டகம், ஓகபிண்டம் (குரங்கு) பரஸதம் (காண்டா மிருகம்), ச்வேதகபோதம் (வெள்ளைப் புறா), கிராமகபோதம் (மாடப்புறா). உணவிற்காகாதனவும் வேறுவித உபயோகமல்லாதவையுமான நாற்கால் பிராணிகள் ஒன்றையும் கொலை செய்யக்கூடாது. பெண்ணாடு பெண்பன்றி போன்ற ஜந்துக்களை அவை சினையாயிருக்கும் போதும், பால் ஊட்டி வரும்போதும் கொல்லக் கூடாது; அவற்றின் குட்டிகளையும் ஆறு மாசம் வரையில் கொல்லக்கூடாது. சேவல்களை வருத்துதல் கூடாது. பதரை அத்துடன் சேர்ந்துள்ள ஜீவ ஜந்துக்களுடன் எரித்துவிடக் கூடாது. காடுகளில் சும்மாவாவது அல்லது