பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அசோகனுடைய சாஸனங்கள்

58

திவ்யாவதானத்தில் கூறப்பட்டிருக்கிறது. இப்பிரதேசம் அக்காலத்தில் செழித்தோங்கிய பல ஸ்தூபங்களாலும் விஹாரங்களாலும் விளங்கியதாக யுவன்சுவங் கூறுகிறான்.

V. அக்காலத்துப் பழம்பொருள்கள்

நமக்கு அகப்பட்டுள்ள பண்டைக்காலச் சாமான்களில் அசோகன் காலத்துக்கு முற்பட்டவை அதிகமில்லை. இந்தியாவின் பழைய சரித்திர ஆராய்ச்சிக்கு இஃது ஒரு பெருங்குறைவே.


இவற்றிலும்
பழமையானவை
இந்தியாவில்
கிடையா

எகிப்து, அஸ்ஸிரியா, கிரீஸ், க்ரீட் முதலிய தேசங்களில் நமக்கு அகப்பட்டுள்ள பண்டைக்காலச் சாமான்களில் அசோகன் காலத்துக்கு முற்பட்டவை அதிகமில்லை. இந்தியாவின் பழைய சரித்திர ஆராய்ச்சிக்கு இஃது ஒருபெருங்குறைவே. எகிப்து, அஸ்ஸிரியா, கிரீஸ், க்ரீட் முதலிய தேசங்களில் கி. மு. 2000 அல்லது 2500 வருஷங்களுக்கு முன்னுள்ள பழம்பொருள்கள் அகப்பட்டிருக்கின்றன. ஆனால் மழை மிகுதியினாலும் இந்தியாவின் சீதோஷ்ண நிலையின் விசேஷத்தாலும் அவ்வளவு புராதனமான பொருள்கள் நம் நாட்டில் அதிகமாக அகப்படவில்லை, அசோகன் காலத்துக்கு முன் வீடுகளும் அரண்மனைகளும் கோயில்களும் எல்லாவித கட்டிடங்களும் மரத்தினாலேயே செய்யப்பட்டன. இவ் விஷயம் நம் நாட்டில் மிகப்புராதனமான பொருள்கள் அகப்படாததற்கு வேறு ஒருகாரணம், அசோகன் காலத்தில் அல்லது அதற்குச் சற்று முன்புதான் இந்திய ஜனங்கள் கட்டிடங்களுக்குக் கற்களை உபயோகிக்கத் தொடங்கினர். அசோகன் கற்களை மரக்கட்டிடங்களுக்கு உபகரணமாக உபயோகப்படுத்தியிருக்கலாம்.

அசோகனால் கட்டப்பட்ட கட்டிடங்கள் எண்ணிறந்தனவென்ற


அசோகனுடைய
வேலைகள்


ஜனங்களின் நம்பிக்கையைக் குறிப்பிட்டு, பாஹியன் என்ற சீனயாத்திரி, மூன்றே மூன்று வருஷங்-