பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ னிய று ப து

39


நாணமே பெண்மையின் நல்ல பேரணி;
நாணமே ஆண்மையை நன்கு காப்பது;
நாணமே மேன்மைகள் நல்கி நிற்பது;
நாணமே புகழறம் நன்மை யாவுமே.

நாணத்தின் மாட்சிகளேயும் ஆட்சிகளேயும் இதனால் நன்கு அறிந்து கொள்கின்றோம்.

8

இல்லுக் கணிமனைவி இன்மனைக்கு நன்புதல்வர்
அல்லுக் கணிமதியம் ஆகுமே-செல்லுக்கு
மாரி வழங்கலணி மாறாத வண்மைக்கு
வாரி வழங்க லணி.

(அ)
இ-ள்.

மனைக்கு மனைவி அணி; அந்த மனைவிக்கு நல்ல புதல்வர் அணி; இரவுக்குச் சந்திரன் அணி; மேகத்துக்கு எவ்வழியும் மழை பெய்தல் அணி; வள்ளலுக்கு அள்ளிக் கொடுத்தல் அணி என்க.

மனிதர் மன்னி வாழும் இடம் மனை என வந்தது. அந்த மனைக்குத் தனியுரிமையானவள் மனைவி என நேர்ந்தாள். இல்லாள் என்று மனைவிக்குப் பெயர். இல்லை ஆள்பவள் என்பதை அது விளக்கியுளது. கணவன் பெயரால் இதைச் சொல்ல நேரின் இல்லான் என வரும். வரவே வறியன் எனப் பொருள் பட்டு மாறுபாடாம். ஆவதை ஆய்ந்து அறிக.

இல்லாள் எனும்பெயரே இல்லுக்கு உயிர் என்னச்
சொல்லால் உணர்த்தும் துணிவுகாண்-இல்லானென்று
உன்பெயரால் சொல்லினே ஊனமுறும் ஒர்ந்தவளே
அன்புசெய்து பேணல் அறம்.

(தருமதீபிகை 52)