பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

53


நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

(மூதுரை, 10)

நல்லவர்கள் நெல்லுப் பயிர்களைப்போல் நலமாய் உள்ளனர். பொல்லாதவர்கள் புல்லிய களைகளைப் போல் புலையா யிருக்கின்றனர். வையமும் வானமும் நல்லவர்களையே உரிமையா உவந்து உதவி புரிந்து வருகின்றன. அந்த உண்மையை இதில் நுண்மையா ஒர்ந்து தேர்ந்து கொள்கிறோம்.

ஒருவன் முயன்று ஈட்டிய பொருளுக்கு அவனுடைய மக்களே தக்க பாதுகாப் பாளராகின்றனர். ஆகவே தேட்டுக்குச் சேயர் அணி என வந்தனர்.

தேட்டு=தேடித் தொகுத்த செல்வம்.

கொள்ளி இல்லாத சொத்து, பிள்ளே இல்லாத சம்பாத்தியம் என எள்ளி இகழப்படுதலால் சந்ததிக்கும் சம்பத்துக்கும் உள்ள உறவுரிமைகளை உணரலாகும்.

உயர்ந்த கருத்துக்கள் உள்ளே நிறைந்திருப்பதே சிறந்த கவியாம். இனிய இசையோடு பாடுவது பாட்டுக்குப் புறத்தே திகழும் அழகாம்; அரியப்பொருள்கள் அகத்தில் அமைந்துள்ளது அகத்தின் அழகாம்.

உரிய அழகுகளை ஒர்ந்து உணர்ந்து பெரிய மனிதனாத் தேர்ந்து கொள்க. இனிய இயல்புகள் தோய்ந்து வரும் அளவே அரிய மகிமைகள் வாய்ந்து வருகின்றன.

பழிபடியாமல் வாழ்ந்து வருவதே புகழுடைய வாழ்வாம். இந்த வாழ்வை எவரும் வியந்து நோக்கி