பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

அணுவின் ஆக்கம்


 அகந்தையில் ஆழ்ந்துள்ள அவன் அவ்வகந்தைக் கிழங்கை வேருடன் தோண்டி எடுத்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டில் திLaiக்கவேண்டும். இதற்கெல்லாம் அறச்சுரணையுடன் வாழும் நம் நாடுதான் வழி காட்டவேண்டும். காந்தியடிகள் காட்டிய பாதையில் அரசியலை வகுத்து உலகை உய்விக்க வேண்டும். அவர் அடிவழி யொழுகும் நேரு போன்ற பெருந்தலைவர்கள் அத்தகைய ஆன்ம அமைதியைக் காட்டும் அரசியற் கருத்துக்களை ஐக்கிய நாட்டு ஸ்தாபனங்களில் அடிக்கடி எடுத்துப்பேசி உலகிலுள்ள அறிஞர் பெருமக்களை அவ்வழிக்குத் திருப்பவேண்டும். அதுவே புத்தர் போன்ற ஞானியர் காட்டியவழி; மன்பதை உய்ய மக்கள், மக்கள் நலத்துக்காக வகுத்துக் கொள்ள வேண்டிய வழி. அத்தகைய பெரு வழியில், அற வழியில், புதியதோர் உலகு வகுத்துத்தர ஆண்டவன் அருள்வாளுக,

வாழ்க உலகெலாம் !


அணுவின் ஆக்கம் முற்றும்