பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102


அன்றே கலப்படத்தடைச் சட்டம் !

பல புதிய நோய்கள் தோன்றுவதற்குக் காரணமான கலப்படம் செய்வதைத் தடுக்க அக்கால அரசுகள் கடுமையாகச் சட்டமியற்றி இருந்தனர். கலப்படக்காரர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். கலப்படத்தைக் கண்டறிய தனிச் சோதனைச் சாலைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்ற தகவல் நம்மை வியக்கச் செய்கிறது.

மருத்துவமனையோடு இணைந்த முதல் மருத்துவக் கல்லூரி

மருத்துவத்துறையின் மாமேதைகளான முஸ்லிம் மருத்துவ அறிஞர்கள் தாங்கள் மேற்கொண்ட இடையறா ஆய்வு முயற்சியின் விளைவாக தங்கள் மருத்துவ அறிவியல் அறிவை நாள்தோறும் வளர்த்துக் கொள்வதில் பெரும் நாட்டமுடையவர்களாகவே திகழ்ந்தனர். எனினும்,தாங்கள் பெற்ற மருத்துவ அறிவியல் அறிவை மற்றவர்கட்குப் புகட்டுவதிலும் பேரார்வமுள்ளவர்களாக விளங்கினர், ஒவ்வொரு முஸ்லிம் மருத்துவ அறிஞரும் தனக்கென மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களைக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக மருத்துவமனை ஒவ்வொன்றுமே ஒரு மருத்துவக் கல்வி புகட்டும் கல்விக்கூடங்களையும் மருத்துவக் கல்லூரியையும் கொண்டதாகவே அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மருத்துவக் கல்விக்கூடங்களிலும் பயிலும் மாணவர்கள் மருத்துவம் பற்றிய கோட்பாடுகளைக் கற்றறிவதுடன் கல்விக்கூடத்தோடு இணைந்த மருத்துவமனைகளில் மருத்துவம் செய்துவரும் நோயாளிகளை நேரடியாகச் சோதனை செய்து பார்ப்பதன் மூலம் நோய்க்கான காரணங்களை நேரடியாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் பயிற்சியும் பெற்றனர். அதன் மூலம் நிறைந்த பட்டறிவும் பெற