பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழ்த்துரை


அமரர் கே. பி. நீலமணி பல்வேறு பரிமாணங்கள் கொண்ட ஒரு ஆளுமையாக திகழ்ந்தவர். நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம், பத்திரிக்கைத் துறை, இசை - விமர்சனம் என்று ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். ஒரு தேர்ந்த இசைக்கலைஞரான அவர் சங்கீதத்தை மையமாக வைத்து எழுதிய “புல்லின் இதழ்கள்” என்னும் நாவல் ஒரு முக்கியமான படைப்பு. எனினும் திரு. நீலமணி அவர்கள் சிறுவர்களுக்காக எழுதுவதில் தான் நீடித்த ஆர்வம் கொண்டிருந்தார் என்று தோன்றுகிறது. “புல்லின் இதழ்களு”க்குப் பிறகு சிறுவர்களுக்காக அவர் எழுதிய படைப்புகள் தான் இலக்கிய உலகில் அவருக்குப் புகழ் தேடி தந்தன.

பெரியவர்களுக்கு எழுதுவதை விட சிறுவர்களுக்கு எழுதுவதுதான் எந்த ஒரு எழுத்தாளனுக்கும், மிகப் பெரிய சவால். தமிழில் நிறைவு தரும் சிறுவர் இலக்கியம் படைத்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சிறுவர்களுக்கு எழுதும் போது. உள்ளடக்கம் குறித்த துல்லியமான பிழைகளற்ற அறிவும், மொழி நடையில் எளிமையும், சொல்லப்படும் விபரங்களுக்கிடையே ஒரு இசைவும் பேணப்பட வேண்டியது மிகவும் அவசியம். சொற்தொகுதி, இடைச்சொற்கள், பேச்சு வழக்கு எழுத்து வழக்கு ஆகியவற்றின் பயன்பாட்டில் உரிய கவனம்