பக்கம்:அண்ணா காவியம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

* * *

110

அண்ணாகாவியம்


மும்முனையில் இப்போரைத் தொடங்கி விட்டேன்!
முரசறைந்தேன்; வீரரெல்லாம் அணிவ குப்பீர்!

எம்முறையில் ஆண்டிடுவோர் சந்தித் தாலும்,
ஏற்றிடுவோம் சூளுரையை: இனிப்பின் வாங்கோம்!

தம்பிகரு ணாநிதிதான் தலைவ ராவார்!
தளமமைப்பீர் திருச்சியிலே! ஒடும் வண்டி

அய்ம்பத்து மூன்றுசூலை பதினைந் தாம்நாள்
அசையாது! சம்பத்தும் மறியல் செய்வார்!



குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த
குல்லூகப் பட்டருக்குத் தொல்லை யென்றால்,

விலக்கிவிட்டுக் காமராசர் முதல்வ ராக
விளங்கட்டும்; சம்மதமே!" என்றார் அண்ணா.

கலக்கமுற்றே அம்மாற்றங் கண்டா ரேனும்...
களஞ்சென்ற கலைஞருக்குச் சிறையைத் தந்தார்!

அலைக்கழித்தும், அய்ந்தாயி ரம்பேர் தொண்டர் :அன்றோர்நாள் போராடிச் சிறைபு குந்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/112&oldid=1079766" இலிருந்து மீள்விக்கப்பட்டது