பக்கம்:அன்னை தெரேசா.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 அவ்வாறே, 1968-ல் ரோம் நகரிலும் அறப்பணிகள் ஆரம்பமாயின. " இப்போது நாம் நமது புனிதத் தந்தைக்கு வெகு அருகாமையில் வந்து விட்டோமே?-போப் ஆண்டவர் நமக்கு எவ்வளவு பெரிய மதிப்பை ஏற்படுத்திக் கொடுத் திருக்கிருர்!- எல்லாம் ஆண்டவன் ஏசுவின் செயல்!”அன்னை மெய்ம் மறந்தார். 'இத்தனை காலமும் நான் தனிமையில் தவித்தேன்; இப்போது நீங்கள் ஆண்டவணை என் இல்லத்துக்கே. கொண்டு வந்து விட்டீர்கள், விஸ்டர்!’’-போப் ஆண்டவர் பரவசமடைந்தார். உலகம் முற்றிலும் கொடி முல்லையெனப் படர்ந்து பரவி வரும் கிறிஸ்தவ சமயம் முழுமைக்கும் ஆனைத் தலைவராகத் திகழ்ந்து வரும் போப் ஆண்டவரின் அருட். கருணையைப் பெறற்கரிய நற்பாக்கியமாகவும் தெய்வத் தந்தை தமக்கு அருளிய மகத்தான வரப்பிரசாதமாகவும்: கருதி அமைதி யடைந்தார்கள் அன்னை. பிறகு 1969-ல் ஆஸ்திரேலியாவில் பர்த்’ நகரிலும், 1970-ல் மெல்பொர்ன் நகரத்திலும், பிறகு ஏமன், ஜோர்டான் போன்ற யூதம், இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய முச்சமயங்கள் ஒரே கடவுள்' தத்துவத்தின் கீழ் வளர்ந்து வரும் மத்தியக் கிழக்கு அரேபிய நாடுகளிலும் அன்னையின் அருட்பணிகள் தீவிரமடைந்தன. அன்னையின் அன்பு தொடர் நிழலாகத் தொடரப் பாக்கியம் பெற்ற உலக நாடுகள் ஏராளம். எத்யோப் பியா, தான்சேனியா, வியட்நாம், இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம்-இப்படிப் பட்டியல் நீளும் அல்லவா? தருமம் மிகுந்தது தமிழகம். கல் தோன்றி மண் தோன்றக் காலத்தில் முன்தோன்றி மூத்த குடியான தமிழினம் அறத்தை வளர்த்துப் பேணிக் காப்பதில் அன்று முதல் இன்று வரை முதன்மைப் பெற்று விளங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/145&oldid=736283" இலிருந்து மீள்விக்கப்பட்டது