பக்கம்:அன்னை தெரேசா.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நாடு மொழி, சாதி, சமயம் கடந்து அன்பு ஊழியம் செய்துவரும் அன்பின் தூதர்கள் இயக்கம் ஆரம்பித்த இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவையொட்டி 1976 அக்டோபர் 7ஆம் நாளன்று கல்கத்தா நகரில் தேவாலய இறைவழிபாட்டுடன் நடைபெற்ற வெள்ளி விழாவில் உலகளாவிய அன்புப் பணிகளை எடுத்துக்காட்டும் வண்ணம் அனைத்துலக நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள் ஏழைகள் புடைசூழ கலந்துகொண்டதும், இந்து, சீக்கியர், ஜெயின், யூதர், அங்கிலிக்கன், ஆர்மேனியன், இஸ்லாமியம், புத்தம், சமணம் மற்றும் கிறிஸ்துவம் போன்ற அனைத்து: மதங்களின் சார்பான ஆலயங்களில் பூஜைகள் நடந்ததும், தியாகத் துறவியாம் உலக அன்னே தெரேசாவுக்கு ஆறுதலை வழங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/170&oldid=736311" இலிருந்து மீள்விக்கப்பட்டது