பக்கம்:அன்னை தெரேசா.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 கோயிலின் இனிய சூழலில் இந்தத் தர்மசாலை மையம் கொண்டிருந்தது; ஆகவேதான், என் வேண்டுகோளுக்கு மாநகராட்சி இணங்கியதும் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே, சமூகத்தால் புறக்கணிக்கப் பட்ட ஏழைகளையும், கைவிடப்பட்ட அைைதகளையும் சாவோடு போராடி, உயிருக்கு மன்ருடிக் கொண்டிருந்த நோயாளிகளையும் இந்த இடத்தில் கொண்டு வந்து சேர்க் கும் ஏற்பாடுகளை விரைவாகச் செய்து முடிக்கவும் என்னல் இயன்றது. அன்றிலிருந்து இன்று வரை, எங்களது அன்புத் தொண்டர்கள், 1950-71 காலக் கட்டத்தில், கல்கத்தா தெருக்களினின்றும் 23000 நோயாளிகளையும் எளியவர்களையும், ஆதரவற்றவர்களையும் சேகரித்து, மரணத்தின் நிலைவாயிலில் அவர்கள் கடைசி அமைதியை அனுபவிக்கக் கூடிய பொன்னை சந்தர்ப்பத்தையும் அவர் களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். இறந்து கொண்டே யிருந்த அவர்களில், அந்த மனித சமூகத்தினரில் சுமார் பாதிப்பேர் பூர்வஜன்மத்துப் பூஜாபலன் காரணமாக, உண்மையிலேயே அமைதியுடன்தான் இறந்தார்கள்!” 1971 ஆம் ஆண்டில், பத்திரிகையாளர் மால்கம் எழுப்பிய கேள்விக்கு அன்னை அளித்த பதில் இவ் வாருகவே அமைந்தது. ※ .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/91&oldid=736407" இலிருந்து மீள்விக்கப்பட்டது