பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


மனந்துகொள்வாள். தனது காதலனின் வீரத்தின் சின்னமாக அந்த புலி நகத்தையும், பல்லையும் தன் கழுத்தில் அணிந்து கொள்வாள். இதுதான் தாலிகட்டுவதன் பொருள் என்று கூறுகின்றனர். அன்று காடுகள் அதிகம், நாடுகள் குறைவு. எனவே காட்டிலிருந்து நாட்டுக்குள் புகுந்து மனிதனை தாக்கிடும் புலியையும் எதிர்க்கும் உடல் வலிமையும் உள்ள உரமும் படைத்தவனைத்தான் பெண்கள் மணக்கவேண்டும் என்ற ஏற்பாடு--தீர்மானம் இருந்தது பொருத்தமாக இருந்திருக்கலாம்.

இதே ஏற்பாடு இன்றைக்கும் இருக்கவேண்டுமா? உண்மையில் எத்தனையோ பேர் திருமணம் செய்து கொள்வதற்காக, இத்தகைய புலிவேட்டைக்குப் போய்வரத தயாராக இருப்பர், இந்த நாளில் ஒருவரும் இருக்க மாட்டார்களே!

இன்று அத்தகைய ஏற்பாடும் பழக்கமும் ஒரு சிறிதும் இல்லையென்றாலும், தாலிக் கயிற்றில் மட்டும் பொன்னால் புலிநகமும் பல்லும் செய்து கோர்த்திட நாம் தவறுவதில்லை, இது தேவைதானா?

இன்றைக்கு நாடுகள் அதிகமாகவும் காடுகள் குறைவாகவும் இருக்கின்றன. இருக்கின்ற காடுகளிலும் புலிகள் காணப்படுவது குறைவு அந்த நாட்களைப் போல இன்றும் நான் போய் காட்டில் புலி வேட்டையாடி, புலியைக் கொன்று அதன் பலனையும், நகத்தையும் எடுத்துச் சென்று என காதலியிடம் என் வீரத்தைக் காட்டி அவள் கழுத்தில் இவைகளைத் தாலியாகக் கட்டுவேன், என்று எந்த இளைஞனாவது இன்றைக்குக் கிளம்ப முடியுமா? அப்படிக் கிளம்பினால் காடு-