பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

 வில்லை...அக்கரை சென்றவன் மனதிலே புகுந்து, இந்த 'ஐயோ பாவ'த்தின் மீது பாசம் ஏற்படச் செய்யவா நேரம் கிடைக்கும்! அதிலும் கடல்கடந்து செல்ல வேண்டும்!

அந்தக் கிராமத்துக்குப் பெரிய பட்டினங்களெல்லாம் பொறாமைப் படக்கூடிய பெயர் இருந்தது...

பொன்னூர்

ஜல்லடை போட்டுச் சலித்தெடுத்தால்கூட ஒரு குண்டுமணி பொன்னும் கிடைக்காத மட்டிக்காடு! அதாவது பிள்ளையார் கேரவில் சாமி வீடு தவிர, ஐயர் வீட்டிலே 'சோதனையிடத் துணிவுகொண்ட 'பாவிகள் உண்டா? மற்ற இடங்களிலே குண்டுமணி அளவு தங்கம் கூடக் கிடையாது... பெயர் மட்டும் பொன்னூர்!

பொன்னூருக்குப் பூர்வீகப் பெருமைகள் உண்டு!

சீதாபிராட்டியாரை மயக்கிய மாயமான் ஓடிவந்த போது கிளம்பிய, தூசி, அங்கு படிந்ததால் பொன்மயமாகி விட்டதாம் அந்த ஊர்!

மாரி கோவில் திருவிழாவின் போது ஆடு வெட்டி ஆண்டியப்பன் கதை படிப்பான். அப்படிப்பட்ட பொன்னூர் அக்கரைச் சீமைக்குக் கூலிகளை அனுப்பும் 'பாக்கியம்' பெற்றுவிட்டது. அந்தத் தொகுதியிலே வெற்றி பெற்ற எம். எல். ஏ. கூட, கடல கடந்த இந்தியர் பாதுகாப்புக் கமிட்டியில் ஓர் உறுப்பினர் கமிட்டி கூடும் போது நாளொன்றுக்குப் பதினெட்டு ரூபாய் 'படிச் செலவுகூடப் பெற்றுவந்தார். 'அக்கரைச்சீமைக்கு அரும்பு மீசை' கிளம்பும் போதெல்லாம்கண்ணீரும் கம்பலையுமாகக் கிழங்கள் கூடிக் கூடிப் பேசும்.