பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

209


கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும் குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண், உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே!

- சேந்தன் கண்ணனார் அக 350 பெரிய கடற்கரையை உடைய தலைவனே உப்பங்கழியில் சிறிய மலர்க்கொத்துகளை உடைய நெய்தற்பூவும் கருங் குவளைப்பூவும் குவியக் கடல் தான்் வீசும் அலையைத் தருதல் குறையாது. அத் துறைப் பக்கத்தே நீண்ட பெரிய கவையான கொம்பையுடைய கரிய ஈரமான சேற்றில் இருக்கும் நண்டு மேலே வெளிப்படச் செல்பவர் இல்லாததால் ஒலி அடங்கியது.

விளங்கும் பெரிய கடற்பரப்பில் எறியும் சுறா மீனைப் பிடிப்பதைக் கைவிட்டு ஒதுக்கி, வலம்புரி முத்தினை மூழ்கி எடுக்கப் பெரிய படகையுடைய மறவர், ஒலியுடைய சங்குகள் கல்லென ஆரவாரிக்கும்படி ஆரவாரம் மிக்க கொற்கையார் எதிர் கொள்ளும்படி படகினின்றும் இறங்கும் மணல் பொருந்திய கரையான அங்கு எம் சின்னஞ் சிறிய நல்ல ஊர் உங்கே தோன்றுகின்றது. காண்பாய்!

வளைந்த நுகத்தில் பூட்டப்பட்ட திரண்ட காலையுடைய கோவேறு கழுதையை மணியுடைய நீண்ட தேரில் பூட்டும்படி நின் பாகனுக்கு ஆணை இட வேண்டா. மிக்க அழகுடைய இவள் வேண்டுகோளின்படி இன்றைய இரவு இந்த ஊரில் தங்கிச் செல்வாயாக, என்று பகலில் வந்த தலைவனிடம் தோழி மொழிந்தாள். امه

305. புன்னைமரச் சோலையில் இரவு வருக பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி, ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன் குடவயின் மா மலை மறைய, பகாடுங் கழித் தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல் நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப, வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து உரு உடன் இயைந்த தோற்றம் போல, அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ,