பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13 5

குறைபாட்டையும் காட்டும்; நிறைவை நோக்கியும் நம்மை ஊக்கும். பல இடர்கள், தடைகளுக்கிடையே சென்ற அரை நூற்றாண்டில் பண்டை லக்கிய ஒளியும் பண்டை வரலாற்றொளியும் சிறிது சிறிதாக ஆய்ந்து பல அறிவுத் தொண்டர்கள் சேகரித்த சேகரத்தின் பயனே நம் இன்றைய அறிவு, இன்றைய குறைபாட்டறிவு! அவ்வனுபவங்களின் விளைவே இச்சிற்றேடு.

போர்களும் அரசர் ஆட்சிகளும், வெளி நாட்டுத் தொடர்புகளும் வரலாற்றின் உயிரல்ல என்பதை மேலை வரலாற்றாசிரியர்கள் சுட்டிச் சுட்டிச் சென்றுள்ளனர். அதன் பயனாகவே இலக்கிய வரலாறு, சமய வரலாறு, அரசியலமைப்பு வரலாறு, பொருளியல் வரலாறு முதலிய வாழ்க்கை நாகரிக வரலாற்றுப் பகுதிகள் உலகில் விளக்கமடைந்து வருகின்றன. ஆனால், நம் தமிழகத்தின் நிலை இவ்வகையில் தலைகீழானது. நமக்குக் கிட்டும் வரலாற்றாதாரம் உலகில் வேறெந்த னத்துக்கும் கிட்டாத ஒன்று. அது உலக வரலாற்றுக்கே ஒரு புதுத் திசை திருப்பியுதவவல்லது. சங்க இலக்கியம் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் அரசியல், சமய, சமுதாய, பொருளியல் வாழ்வை நாம் அறிவது போல், உலகில் வேறு எந்தக் காலத்துக்கும் முழு வரலாற்றோவியம் காண முடியாது. இதை எல்லா வரலாற்றாசிரியர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், இதிலேயே தமிழர் நெடுநாள் சொக்கியிருந்துவிட்டனர் எனலாம். புலமை சான்ற வரலாற்றாசிரியர் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழகம் பற்றி அணி அணியாக எழுதினர். நுணுக்க விரிவாக எழுதினர். ஆனால், அதன் பிற்பட்ட 1800 ஆண்டு வரலாற்றுக்கு அதுபோன்ற இலக்கியம் இல்லை. அதுபோன்ற வரலாறு நீண்ட நாள் எழுதப்பட முடியாது. இது உலக வரலாற்றிலே ஒருபுதிர் - உலக வரலாற்றுக்கே ஒரு புதிர் ஆகும்.

கல்வெட்டு, பட்டயங்கள், நாணயங்கள் உதவியால் தமிழ கத்துக்கு நாம் காணும் வரலாறு சென்ற ஆயிர ஆண்டு வரலாறே. அது சங்ககால வரலாறு போல் நிறைவுடைய தேசிய வரலாறு அல்லவே அல்ல. ஆனால் அது உலக வரலாறு தொடங்கிய இடத்தில் தொடங்கிற்று - ஆண்டு, நாட்டுப் பெயர், இடம்,