பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1.வீரமரபு

சங்க காலம்

”வீரம் செறிந்த தமிழ்நாடு!”
“புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு"
“கல்விசிறந்த தமிழ்நாடு”
"செல்வம் எத்தனை உண்டு புவிமீதே
அவையாவும் படைத்த தமிழ்நாடு”

வீரம், புகழ், கல்வி, செல்வம் ஆகிய பண்டைத் தமிழகத்தின் மரபு வளங்களை எண்ணிப் பெருமைப்படுகிறார், கவிஞர் பாரதியார்! இந்நான்கு கூறுகளிலுமே தமிழகம் இன்று அடைந் துள்ள நிலையை எண்ணினால் பாரதியார் உரைகளை நாம் கவிஞர்களுக்கு இயல்பான மிகையுரைகளேன்றோ, புனைந்துரை களென்றோதான் கருத வேண்டி வரும். 'கொடுக்கிலாதானைப் பாரியே' என்றும், "போர்க்களங் காணாதவனைப் புலியேறு' என்றும் புகழும் கவிராயர் மரபில் இவையும் சேர்ந்தவைதானோ என்று எண்ணத் தோன்றும்.

கவிஞர் பாரதியாருக்கே இத்தகைய ஐயங்கள் ஏற்பட்டிருந் தனவோ, என்னவோ? அவர் அவற்றை வரலாற்றுப் புலவன் மரபில் நின்று வகுத்துரைக்க முயன்றுள்ளார்.

கம்பன், இளங்கோ, வள்ளுவர் ஆகிய கலைச்சிகரங்களை அவர் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார். அக்கல்விக் கடல்களைத் தந்த தமிழ் நாடு 'கல்வி சிறந்த தமிழ்நாடே' என்பதை மெய்ப் பிக்கின்றார். இதுபோலவே 'வீரம் செறிந்த தமிழ்நாடு' 'புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு' 'செல்வம்... யாவும் படைத்த தமிழ்