பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/32

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13 11

சீனம், மிசிரம், யவனரகம் - இன்னும் தேசம்பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம், படைத்தொழில், வாணிகமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு

சிங்களம் - இலங்கையையும், சாவகம்- மலாயா, சுமத்ரா, ஜாவா ஆகிய நாடுகளையும், புட்பகம்- பர்மாவையும், மிசிரம்- எகிப்தையும், யவனரகம் - கிரேக்க, உரோம நாடுகளையும் குறிப் பவை. தவிர, பண்டைத் தமிழ் இலக்கியத்தில் மலாயா நாடு- கடாரம் என்றும், காழகம் என்றும், பர்மா-அருமணம் என்றும் அழைக்கப்பட்டன. காழகம், கலிங்கம் என்ற நாட்டுப் பெயர்கள் தமிழிலக்கியத்தில் அந்நாடுகளுக்குரிய துணி வகைகளின் பெயர் களாகவும், வங்க நாட்டின் பெயர், கங்கையாற்றில் செல்ல உதவிய தட்டையான கப்பல் வகையின் பெயராகவும் விளங்கின. இலங்கையின் பெயராகிய ஈழம், பொன்னின் பெயராக வழங்கிற்று. இவை தமிழரின் மிகப் பழமை வாய்ந்த கடல் கடந்த அயல் நிலத்தொடர்புகளுக்குத் தமிழ் மொழியே தரும் அகச் சான்றுகள் ஆகும்.

ஆரியர் இமயம் கடந்து வருவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே தமிழினத்தவர் எழுத்தும் கலையும் நாகரிகமும் உடையவராய், சிந்து கங்கை வெளியெங்கும் பரவி நாடு நகரங்களும், கோட்டை கொத்தளங்களும் நிறுவி வாழ்ந்தனர். கி.மு. 3000 ஆண்டளவிலேயே அவர்கள் (வணிகர்) சிந்து வெளியிலும் ஏலம், சுமேர் ஆகிய இறந்துபட்ட நாகரிக வெளிகளிலும் வாணிகம் செய்தும் குடியேறியும் நாகரிகம் பரப்பியுமிருந்தனர். ஏலம், சுமேர் மக்களும் எகிப்தியரும் தமிழரின் பண்டைக்கிளையினங்களாகச் சென்று குடியேறியவர்கள் என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். திருத்தந்தை ஹீராஸ் தமிழினத்தவரில் ஒரு சாராரான திரையர் அல்லது திராவிடர் நடுநிலக்கடலெங்கும் பரந்து, ஸ்பெயின், பிரான்சு, இங்கிலாந்து முதலிய நாடுகளிலும், நடு அமெரிக்காவிலும்கூட வாழ்ந்து பண்டைப் பெரு நாகரிகங்கள் வளர்த்திருந்தனர் என்று கருதுகிறார்.இப்போதுள்ள மனித இனம் நாகரிகமடையு முன்பே, உலகெங்கும் பரவியிருந்த, மரபிழந்து போன ஒரு முன்னைய