பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14|| அப்பாத்துரையம் - 16

புறநானூற்றுக் காலத் தமிழகம்: இரு கருத்துரைகள்

தமிழ் வெறியர், தமிழ்ப் பற்றார்வலர்களை மட்டுமன்றி, ஆறியமைந்த தமிழார்வமுடையவர்களைக்கூடத் தட்டியெழுப்ப வல்லவை.புறநானூறு பற்றிக் காலஞ் சென்ற இராவ்பகதூர் எஸ். வையாபுரி அவர்கள் குறிப்பிட்ட இரண்டு கருத்துகள். புறநானூற்றுக் காலத் தமிழினமும் இக்காலத் தமிழினமும் பெயராலும் உடலாலும் ஒன்று; உயிராலும் பண்பாலும் வேறு என்று கருதுபவர் அவர். தமிழார்வலர் இன்று அவ்வாறு கருத முடியாது.பழந்தமிழினமும் இன்றைத் தமிழினமும் உயிராலும் பண்பாலும் ஒன்று; உடலாலும் சூழலாலுமே வேறுபட்டது என்றுதான் நாம் கருதுகிறோம். ஆயினும் இந்நிலையிலும் இராவ்பகதூர் அவர்களின் கருத்துகள் புதுமையுடையன. புத்துயிரும் புத்தூக்கமும் எழுப்புவன என்றே கொள்ளத் தக்கவை. அவற்றில் கருத்துச் செலுத்துவது பெரும் பயனுடையதாகும். என்பதில் ஐயமில்லை.

அவர் முதல் கருத்து, வரலாற்று முக்கியத்துவம் உடையது. மொழியாராய்ச்சியாளரின் தனிப்பட்ட கவனத்திற்குரியது.

"முதலாவது நாம் கவனிக்கத் தக்கது, திராவிட மொழிகள் பலவும் புறநானூற்றுக்குப்பின், இவ்விரண்டாயிரம் ஆண்டுகளில் தோற்றியவைகளே. மலையாளம் சுமார் கி.பி. 1200-ல் தமிழி லிருந்து கிளைத்தது. இதற்கு 4 அல்லது 5 நூற்றாண்டுகளுக்கு முன்னே கன்னடமும் தெலுங்கு கிளைத்தன.

"தமிழுக்கும் இவற்றுக்கும் இடையேயுள்ள தொடர்பு தாய்மை (சேய்மை)த் தொடர்பா, அல்லது தமக்கை தங்கைத் தொடர்புதானா என்ற விவகாரம் இப்போது அவசியமில்லை. ஆசிரியர் சுந்தரம் பிள்ளை,

"கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளம் துளுவும் உன்னுதிரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

என்று கூறுவது பெரும்பாலும் உண்மையே என நடுநிலையாளர் எவரும் ஒப்புக் கொள்வ...