பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/40

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2. வான விளிம்பு

தமிழகத்திலே பல வரலாற்று மரபுகள், புராண மரபுகளிடையே புராண மரபுகளாக மயங்கியுள்ளன. அதே சமயம் பல புராண மரபுகள், வரலாற்று மரபுகளாக மதிப்புப் பெற்றுள்ளன. பழமையின் வான விளிம்பிலேயே இவற்றின் மயக்கங்கள் மிகுதி.

எடுத்துக்காட்டாக, தமிழ் மூவேந்தர்களுடைய தலைசிறந்த முன்னோர்களின் அருஞ்செயல்களே, தமிழர்பெருந்தெய்வங்களின் புகழ் மரபுகளாக உலவுகின்றன. சிறப்பாகப் பாண்டியர் வாழ்வுடன் சிவபெருமானும், சேரர் வாழ்வுடன் முருகனும், சோழர் வாழ்வுடன் திருமாலும் இணைகின்றனர்.

மலையமலைக்குரிய மன்னனாகிய பாண்டியன் வளர்த்த முத்தமிழ் நங்கையே மூன்று மார்பகங்களையுடைய தடாதகைப் பிராட்டி அல்லது மலைகளாகவும், அவளை மணந்த செளந்தர பாண்டியனே சிவபெருமானாகவும், அவர்கள் பிள்ளை உக்கிர பாண்டியனே முருகனாகவும் திருவிளையாடற் புராணத்தில் காட்சியளிக்கின்றனர். பல ஆராய்ச்சியாளர் சௌந்தர பாண்டி யனை நிலத்தரு திருவிற் பாண்டியன் அல்லது தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாகவும், உக்கிர பாண்டியனை கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியாகவும் காண்கின்றனர்.

கடன்மா (கடலில் விரைந்து முன்னேறும் மரக்கலம்) ஊர்ந்து சென்று கடற் கடம்பரை அழித்த சேரரின் பெருஞ் செயலிலே நாம் முருகன் வீரப் புகழ் மரபைக் காண்கிறோம், கடல்பிறக் கோட்டிய செல்கெழு குட்டுவனின் இச்செயலை வருணிக்கும் பரணர், புராண மரபினை உவமையாகக் காட்டத் தவறவில்லை. இக்குட்டுவனோ அல்லது அவன் முன்னோருள் ஒருவனோ முருகனாகவும் 'கடம்பின் வாயில்' போரில் அவனால்