பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26. அம்பிகாபதி கடவுள் பாடல் பாடிய காதை


அகப்பொருள் சிற்றின்பக் கருத்தணு வளவும் புகப்பெரு தரிய பேரின்பம் பொருந்த
ஈறில் அம்பிகை இறைவி மீது
நூறு பாடல் நுண்மாண் நுழைபுல

5 வீறுடன் புலவோர் வியக்க இயற்றிப்
பலரும் கேட்கப் பாடினே உள்ளம்
மலர அமரா வதியை மணக்கலாம்;
சிற்றின்பக் கருத்து சிறிது கலக்கினும்
மற்றிவ் வுலகை மறக்கவேண் டுமெனக்

10 கொற்றவன் குறித்தநாள் குறுகக் கம்பரொடு
அம்பி காபதி அரசவை நோக்கிப்
போகை யிலேவழிப் போக்கர் இருவருள், போகவேண் டாவென ஒருவன் புகல,
அம்பி அவனை நோக்க, அவன்ருன்

15 உம்மை நோக்கியான் உரைத்திலேன் என்ன,
அம்பி அதன்பின் அரசவை அடைந்தான்.
செம்புல மாந்தரும் செறிந்தனர் அவையில்.
அரசன் வந்துதன் அரியணை யமர்ந்தான்.
பரசப் பலரும், பாவியற் றலாமென

20 அரசன் ஆணை அறிவிக்கப் பெற்றது.
அணிபெறும் பாடல் அம்பி காபதி


8. ஈறில் - ஈறு இல்-அழிவில்லாத. 4. நுண்மாண் நுழைபுலம்நுட்பமான மாட்சிமையுள்ள கூரிய அறிவு. 13-18. வழிப்போக்கர் இருவருள் ஒருவன் போக வேண்டா' எனப் புகல - என்று கொண்டு பொருள் காண்க. 17. செம்புல மாந்தர் - செம்மையான அறிஞர்கள்; செறிந்தனர் - கிறைந்தனர். 19. பரச - பே ற்ற.