பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அம்மையும் அப்பனும் வளர்ச்சி, மறைவு நிலைகளையும் கூறிச் சென்றுள்ளனர். பிற சமயங்களும் ஏறக்குறைய இந்த நிலையில்தான் இறைவன் அருளே இந்த அண்டமும் அவனியும் எனக் கண்டு எழுதியுள்ளன. இனி இந்த அண்ட கோளத்தில் பலப்பல அண்ட கோளங்களுள் ஒன்றாகிய நம் அண்ட கோளத்தில் அமைந்த நம் உலகத்தையும் அதன் காலத்தை யும் அதில் வாழும் நம் கால நிலையினையும் காணல் நலம் பயக்கும் என எண்ணுகிறேன். பரந்த அண்ட கோளமாகிய கடலில் நம் உலகம் ஒரு துளி நீர், அப்படியே விரிந்த கால எல்லையாகிய கோடி கோடி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட ஆம்பலும் நெய்தலும் அளவிட முடியாத கால எல்லையில் நம் வாழ்வு ஒரு நொடியில் கோடி கோடியில் ஒரு பங்கு இந்த உண்மையினை உணர்ந்தால் உய்வு உண்டு. இந்தப் பரந்த அண்ட கோளத்தின் ஒரு பகுதியாகிய இவ்வுலகில் வாழும் நாம் நம்மைப் பற்றியே சிந்தித்துநம் வாழ்வே வாழ்வென எண்ணி வாழ்கின்றோம். 'யான்' 'எனது' என்னும் அகங்காரமமகாரமாகிய மயக்கத்தில் வாழ்கின்றோம். வள்ளுவர், 'முந்திரிமேல் காணி மிகினும் கீழ்தன்னை இந்திரனாப் போற்றி விடும்' என்று கூறுவது போன்று எல்லா உலகங்களும் நமக்கு அடக்கம் என இறுமாப்பும் கொள்கின்றோம். நாம் வாழ-நமக்கு உலகம் அடிமையாக உள்ளது என்ற உணர்வு மிகுகின்றது. அப்படியே நாம் என்றும் வாழ் வோம் என்று தருக்கியும் வாழ்கின்றோம். 'கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக் கண்டும் எண்ணும் திறமாய் இருப்போம் என்றெண்ணுதே'