பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

xvi


இக்கட்டுரை ஒரு முன்னுரையேயன்றி ஆராய்ச்சியல்ல. இதன் நோக்கம், ஆசிரியரை அறிமுகப்படுத்தி, சிந்தனைத் தொகுப்புகளை வாசிக்கவும், கருத்துக்களை சர்ச்சைக்குட்படுத்துவதுமே. அயோத்திதாசர் ஏற்றுக்கொள்ளப்படலாம் அல்லது தள்ளப்படலாம். ஆனால் இரண்டிற்குமுன் வாசிக்கப்பட வேண்டும், விவாதிக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம்.

முதல் இரண்டு தொகுப்புகளுக்கும் போலவே இந்த மூன்றாம் தொகுதிக்கு திரு. அன்பு பொன்னோவியம் அவர்களின் ஒத்துழைப்பும், ஊக்கமும் இன்றியமையாததாக இருந்தது. அன்னார் மூன்றாம் தொகுப்பை புத்தக வடிவில் பார்க்கவியலாமற் போனது வருத்தத்திற்குரியது. இயற்கையெய்துமுன் மூன்று தொகுதிகளுக்குமான மறு அச்சுவந்துவிட வேண்டுமென்று பெரிதும் முயன்றார். அவரது அவா விரைவில் நிறைவேறுமென நம்புகிறேன். அடுத்தபடியாக எனது நன்றி நாட்டார் வழக்காற்றியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்களுக்கும் துணை ஊழியர்களுக்கும் உரித்து. அவர்கள் அளித்துவரும் ஊக்கமும் ஆதரவுமின்றி இன்றைய சந்தர்ப்பத்தில் சமூகத்திற்குப் பயன்படக்கூடிய ஆராய்ச்சிகளை குறிப்பாக அயோத்திதாசர் பற்றிய விவாதங்களைத் தொடர்வது எளிதல்ல. இதில் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் முனைவர் டி. தருமராஜன். அயோத்திதாசர் ஆராய்ச்சி தொடர்வதில் கருத்துக்கள் பரவுவதில் அவர் காட்டி வரும் ஊக்கமும் உழைப்பும் போற்றத்தக்கது. மையத்தின் புது இயக்குர் அருட்தந்தை பிரிட்டோ வின்சென்ட் இக்கட்டான சூழ்நிலையிலும் மூன்றாம் தொகுப்பினை வெளிக்கொணர தயங்காமல் முன்வந்தார். அவருக்கும் நன்றி. அச்சு கோர்த்தவர் திரு. ஹரிநாராயணன். அவரே, அகர வரிசைகளைத் தொகுக்கவும் துணைபுரிந்தார்.

ஞான. அலாய்சியஸ்