பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசியுரை சங்கீத கலாநிதி-திருமதி டி.கே. பட்டம்மாள் அவர்கள் சாகித்திய கவனம் செய்யும் கலை எல்லோருக்கும் கை வரப் பெறுவதில்லை. இந்தக் கலை பூர்வ ஜென்மப் பயனல் சிலருக்கே வாய்க்கிறது. பொதுவாகக் கவிஞர்கள் புதிய புதிய கவிதைகள் செய்ய விரும்புவது இயற்கை. ஆனல் மற்ருெரு கவி எழுதிய சாகித்தியங்களுக்கு நாம் உயிர் கொடுப்பது மிகவும் கடினமானது. இந்த விஷயத்தில் பூரீ கு. சா. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் முயன்று சாதித்திருக்கும் 'அருட்பா இசை யமுதம்' என்ற இந்நூல் மிகவும் பாராட்டத் தக்கதாகும். பூரீ இராமலிங்க ஸ்வாமிகளின் அருட்பாக்களை கீர்த்தனை வடிவமாக அமைத்துள்ள சாதனை மிகவும் போற்றத்தக்கது. அதிலும் எண்சீர், அறுசீர்களிலுள்ள விருத்தப் பண்களை கீர்த்தனை வடிவமாக்க அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்று சற்று கூர்ந்து நினைத்தால்; நம் கண்கள் சுழன்று தலை சுற்றும். இந்தப் பணியில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் இருந்திருக்குமென்பது நம் உணர்வுக்கு அப்பாற்பட்டது. “அருட்பா இசையமுதம்' என்ற 101 பாடல்கள் அடங் கிய இப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு உருப்படிக்கும் அதற் கேற்ற இராகம், தாளம் அமைத்து, ஸ்வரப்படுத்தி உயிர் கொடுத்திருக்கும் பூரீமதி குருவாயூர் பொன்னம்மாளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆன்மீக அனுபவ அருள் நிறைந்த ரீ இராமலிங்க ஸ்வாமிகளின் விருத்தப் பண்களை எத்தனை முயன்றாலும் ஒன்றிரண்டு பாடல்களுக்குமேல் இராக ஆலாபனம் செய்து