பக்கம்:அறப்போர்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


விடும். சில சமயங்களில் ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்தை எதிர்த்துப் போரிடுவதும், ஒரு விலங்கே வேறு விலங்குக் கூட்டத்தை எதிர்த்துக் குலைப்பதும் காட்டு வாழ்க்கையில் நிகழ்கின்றன. மனிதனுக்கும் கோபம், பகை எல்லாம் உண்டு. அவற்றோடு அவனுக்கு அறிவும் இருப்பதால் அந்தத் தீய குணத்தை அடக்கப் பார்க்கிறான். அறிவிலே பழுத்தவர்கள் கோபமே இல்வாமல் வாழ்கிறார்கள். எல்லோருமே அப்படி இருந்துவிட முடியுமா?

கோபத்தை வராமலே அடக்குவது பேரறிவு. கோபம் வரும்போதும், வந்தபின்னும் அடக்குவது அதைவிடக் குறைந்த அறிவு. வந்தபின் வார்த்தையளவிலே அந்தச் சினத்தைக் காட்டி அமைவது அதைவிடக் குறைவான அறிவு. ஆனால் வார்த்தைகளுக்கும் அப்பால் சினம் செல்வதுண்டு. பிறரை அடித்தலும், கொலை செய்தலும் ஆகிய செயல்களாக அந்தக் கோபம் விளைவதும் உண்டு. அப்போது கூட மனிதனுக்கு அறிவு இருப்பதனால் தந்திரமாகவும் கருவிகளைக் கொண்டும் அந்தக் காரியங்களைச் செய்கிறான்.

ஒரு சமுதாயமே மற்றொரு சமுதாயத்தை எதிர்ப்பது உண்டு. அதைப் போர் என்று சொல்வார்கள். இந்தப் போருக்கு மூலகாரணம்

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/33&oldid=1267406" இலிருந்து மீள்விக்கப்பட்டது