பக்கம்:அறிவியல் அகராதி.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tin

438

ton


tinning - வெள்ளியமேற்றல்: பித்தளை, வெண்கலம், செம்பு ஆகியவற்றிற்கு மெல்லிய வெள்ளியத் தகடேற்றல். (வேதி)

TIROS - டிராஸ்: அமெரிக்கச் செயற்கை நிலா. வானிலையை அறியப் பயன்பட்டது. (இய)

tissue - திசு: குறிப்பிட்ட வேலையைச் செய்யுங் கண்ணறைகளின் தொகுதி. சுருங்குவதற்கும், நரம்புத் தூண்டல் துலங்கலுக்கும் நீர்ம அல்லது குருதி ஊட்டம் செல்வதற்கும் திசு காரணமாய் உள்ளது. இது தாவரத்திசு, விலங்குத் (மனிதத் திசு) என இரு வகைப்படும். இவ்வகை மேலும் விரியும். (உயி)

tissue culture - திசுவளர்ப்பு: தகுந்த ஊடகத்தில் கண்ணறைகள், திசுக்கள், உறுப்புகள் ஆகியவற்றைப் பேணல், (உயி)

titanium - டைட்டானியம்: Ti. சாம்பல் நிற மாறுநிலைத் தனிமம். இலேசானது, கம்பியாக்கலாம். உயரிய இழுவலிமையும் குறைந்த பெருகெண்ணும் கொண்டது. அதிகம் கிடைக்கக்கூடிய ஆக்சைடு தாது இரும்புக்கல். கப்பல்கள், வானவூர்திகள் முதலியவை செய்யப் பயன்படுவது. (வேதி)

titanium dioxide - டைட்டானியம் ஈராக்சைடு: TiO₃ வெண்ணிறத்தூள். நீரில் கரையாதது. காடிகளில் மெதுவாக வினையாற்றுவது. விரைவாகக் காரங்களில் கரைந்து டைட்டனேட்டுகள் என்னும் உப்பைக் கொடுப்பது. இயற்கையில் அனடேஸ், ருட்ரடைல் தாதுக்களாகக் கிடைப்பது. பீங்கான் பொருள்களுக்கு வெண் மெருகேற்றவும் மற்றும் தாள் தொழிலிலும நெசவுத் தொழிலிலும் பயன்படுதல். (வேதி)

titration - தகுதிபார்த்தல்: தரம் பார்த்தல். பருமனறி நுணுக்கம். இதில் செறிவு தெரிந்த ஒரு கரைசல், செறிவு தெரியாத ஒரு கரைசலோடு முடிவு நிலை தெரியும்வரை சேர்க்கப்படுகிறது. இஃது இயற்பியல் வேதியியலில் ஓர் அடிப்படைச் செயல்முறை. (இய)

toads - தேரைகள்: இருநிலை வாழ்வி வகுப்பைச் சார்ந்தவை. (உயி)

Tollen’s reagent - டோலன் வினையாக்கி: அணைவு அயனி, Ag(NH3)2+ இன் கரைசல். வெள்ளியாடி ஆய்வில் பயன்படுவது. இந்த ஆய்வு ஆல்டிகைடுகளையும் ஆல்கைன்களையும் கண்டறியப் பயன்படுவது. (வேதி)

tomography - தளவரைவியல்: இது ஓர் நுணுக்கம். நோய் கண்டறிவதற்காகப் பொருளின் குறிப்பிட்ட தளம் இதில் எக்ஸ் கதிர்களினால் படம் பிடிக்கப் படுதல். (உயி)

tone - உரப்பு: இழுத்துக் கட்டப்பட்ட கம்பியை ரப்பர் சுத்தியால் தட்டக் கம்பி மேலும் கீழும் அசையும் மொத்தத் தொலைவு வீச்சு