பக்கம்:அறிவியல் அகராதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

buf

61

bur


அரும்பு விலக்கப்பட்டு மற்றொரு தாவரத்தின் மீது ஒட்டப்படுகிறது. எ-டு ஆப்பிள், கிச்சலி. (உயி)

buffer solution - தாங்கு கரைசல்: வீறுள்ள காடியையோ படிக மூலியையோ சேர்த்தாலும் பி.எச். மாறாக்கரைசல் அல்லது தனித்த காடித்தன்மையும் காரத்தன்மையும் கொண்ட கரைசல். (வேதி)

bug - பிழை: ஒரு நிகழ்நிரல் (புரோகிராம்), மின் சுற்று அல்லது மின் கருவியமைப்பு ஒழுங்காக வேலை செய்வதைத் தடுக்கும் பகுதி. இயல்பாகவே கருதப்படுவது. (இய) 2. மூட்டைப் பூச்சி. (உயி) ஒ. debug.

bulb - குமிழம்: தரைக் கீழ் தண்டின் மாற்றுருக்களில் ஒன்று. எ-டு. வெங்காயம். (உயி)

bulbii - நுண்குமிழம்: தரைமேல் மொட்டிலிருந்து உண்டாகும் சிறிய பகுதி. எளிதில் பிரிந்து தனித் தாவரமாக வளர்வது. எ-டு: வெங்காய வகை. (உய)

bulk constant - பரும மீட்சி மாறிலி: பருமத் தகைவுக்கும் பருமத் திரிபுக்கும் இடையே உள்ள வீதம். (இய)

bulldozer - மண்சமன்பொறி: மண்ணைச் சமனாக்கப் பயன்படும் எந்திரம். (உயி)

bumping - மீக்கொதித்தல்: ஒரு நீர்மத்தில் காற்றழுத்தத்திற்கு மேல் அழுத்தம் இருக்கும் பொழுது, குமிழ்கள் தோன்றுவதால் அதில் ஏற்படும் வலுவந்த கொதித்தல். (இய)

bundle - திரள்: தாவரத் தண்டின் மையத்திலுள்ள குழாய் உருளை. திறந்த திரள், மூடிய திரள் எனப் பலவகை. பா. xylem. (உயி)

bunsen burner - புன்சன் எரிப்பான்: எளிய வளி எரிப்பான். (வேதி)

buoyancy - மதப்பாற்றல்: 1. நீர்மத்தில் அழுத்தப்பட்ட பொருள் நுகரும் அழுத்தம் பாய்மத்தில் அமிழ்வதால் ஏற்படும் தோற்ற எடை இழப்பு பொருளினால் விலக்கப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம். இது ஆர்க்கிமெடிஸ் விதி. புகழ்வாய்ந்த கிரேக்க கணக்கறிஞர் (கி.மு.287-212), ஆர்க்கிமெடிஸ். 2. காற்றில் அல்லது நீரில் இலேசாக மிதக்கும் திறன். (இய)

bur - முட்கருக்கு: சில தாவரங்களில் காணப்படும் பகுதி. துணி அல்லது விலங்கு மீது ஒட்டிப் பரவுவது. எ-டு. நாயுருவி. (உயி)

burette - விட்டளவி: அளவுகள் குறித்த நீண்ட குறுகிய குழல். பருமனறி பகுப்பிற்குப் பயன்படுதல். ஒ. pipette. (வேதி)

burning - எரிதல்: இது ஓர் உயிர்வளி ஏற்றம். விரைவாக நடைபெறுவதால் வெப்பமும் ஒளியும் உண்டாகும். ஆகவே, இது ஒரு வேதிமாற்றமாகும். பொசுங்கும் பொருள்கள் எரியும் பண்புடையவை. (வேதி)