பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

618

யது: எண்ணெய்ப் பசையைத் தடுக்க வல்லது: மேற்ப ரப்பு கடினத்தன்மை கொண்டது. இதனால், இது மின் பொருள்கள் பொத்தான்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது.

Useful load: (வானூ.) இன்றியமையாச் சுமை: விமானத்தில் இன்றியமையாது தேவைப்படும் சுமை விமான ஊழியர்கள், பயணிகள், எரிபொருள் இதில் அடங்கும்.

Utility: பயனோக்கப் பண்பு: நடை முறைப் பயனுடைய பண்பு அல்லது நிலை. நடைமுறைப் பயன் பாடுள்ள பொருள்.

V

'v' s , (எந்: பட்.) "வி" வழிகள் : மேசை அல்லது பொருட்கள் நிறைந்த கலங்கள் நகர்ந்து செல் வதற்கென சற்று உயரமான அல்லது குழிவான வகையில் அமைந்த 'v' வடிவப் பாதைகள்.

vaccum : (இயற்.) வெற்றிடம்: காற்று அல்லது வேறு ஏதேனும் ஒன்று வெளியேற்றப்பட்ட கொள் கலம். (நீராவி, வெப்பம்).

vaccum brake : (தானி.) வெற்றிட முறை பிரேக் : கனரக பயணி வாகனங்களுக்கு மிகவும் உகந்த ஏற்பாடு. பிரேக் இயக்கு முறையானது உள் வாங்கு பல முனைக் குழாய், அல்லது கார்ப்புரேட்டரிலிருந்து திராட்டிலுக்கு சற்று மேலே வெற்றிடத்தை பெற்றுக் கொண்டு இயங்குகிறது.

Vaccum cleaner: வெற்றிட முறை துப்புரவி : கம்பள விரிப்பு போன்றவற்றிலிருந்து குப்பை, தூசு ஆகியவற்றை வெற்றிட முறை மூலம் உறிஞ்சும் மோட்டாரால் இயங்கும் மின்விசிறிக் கருவி.

Vaccum forming : (குழை,) வெற்றிட முறையில் உருவாக்கம் : ஷீட் உருவாக்கம் வெப்ப முறை உருவாக்கம் ஏற்றும் பெயர் உண்டு. முக்கியமான ஒரு முறையில் வெப்ப பிளாஸ்டிக், குழைமம் ஆகிற அளவுக்கு சூடேற்றப்பட்டு பிறகு வெற்றிட முறை மூலம் ஒரு அச்சில் வந்து படியும்படி செய்யப்படுகிறது. இதில் பல மாறுபாட்டு முறைகள் உள்ளன. காற்றைச் கீழ்நோக்கிச் செலுத்தி குழைமம் வீட்டுகளாக உருவாகும்படி செய்யலாம். அல்லது காற்றை மேல் நோக்கிச் செலுத்தியும் ஷீட்டுகளை உருவாக்கலாம். இந்த முறையைப் படிமான முறை என்றும் கூறலாம். விளம்பர அடையாளங்கள், விமான உறை போன்றவற்றைச் செய்ய படிமான முறை பயன்படுத்தப்படுகிறது.

Vaccum control (தானி.) வெற்றிடக் கட்டுப்படுத்தி : பல முனைக்குழாய் வெற்றிடத்தினால் கட்டுப்படுத்தப்படுகிற பிரேக்,கிளட்ச் போன்று மோட்டார் வாகனத்தின் எந்த ஓர் உறுப்புக்கும் பொருந்தும்.