பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அறிவியல் தமிழ்

நிலையினைக் கண்டார். விண்மீன் விழுந்ததனால் அரசனுக்குக் கேடு வரும் என அஞ்சினார். இவர் அஞ்சிய படியே ஏழாம் நாள் - கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற அரசன் விண்ணாடு புக்கான். இதனைப் புறநானூறு குறிப்பிடுகின்றது."

வெட்டவெளியும் அதனுள் அடங்கியிருக்கும் அண்டங் கண் யாவும் சேர்ந்ததுதான் அகிலம் (Universe). கோடிக் கணக்கான விண்மீன் மண்டலங்களும், அவற்றினின்றும் விடுபட்ட தனித்தனி மண்டலங்களும், வால்மீன்களும் (Comets), sosivsstsGth (Meteorites) srsārsvar bpaosu கதிரவ மண்டலத்தைச் சுற்றிச் சுழன்று கொண்டுள்ளன. இவற்றின் பிறப்பு, மூப்பு, சாக்காடு இவைபற்றிய செய்திகளை இன்றைய வானநூல் வல்லுநர்கள் அறிந்து வெளியிட்டுள்ளனர். மணிவாசகப் பெருமான் இந்த அகிலத்தைப்பற்றி,

"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன. 69

என்று கூறியுள்ளார். இவ்வுலகிலுள்ள 92 தனிமங்களின் அணுக்களும் தம்மொடுதாமும் பிறிதுமாகச் சேர்ந்து அனுத் திரளைகள் ஆகிய திரட்சியே அண்டங்கள் என்பதும் அறிவியலார் ஆராய்ந்து கண்ட மெய்மையாகும். இந்த அறிவியல்உண்மையினையே கவிஞர்பரஞ்சோதியார்,

9. புறம்-229. 19. திருவாசகம்-திருவண்டப்பகுதி அடி. (1-4)