பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


28. காரமானி என்றால் என்ன?

காரச்செறிவை அளக்கப் பயன்படுங் கருவி.

29. ஊதுலை என்றால் என்ன?

இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்பயன்படும் உலை.

30. ஏனைய கருவிகள் யாவை?

பூரட் பிப்பெட், முகவை, கண்ணாடி உருளிகள்.

5. வேதிமுறைகள்

1. வேதிமுறை என்றால் என்ன?

1. கரைசலிலிருந்து அதன் பகுதிப் பொருள்களைப் பிரித்தல். - உப்புக்கரைசல். 2. தாதுக்களிலிருந்து உலோகத்தைப் பிரித்தல் - பெசீமர் முறை - எஃகு.

2. வடித்துப்பகுத்தல் என்றால் என்ன?

ஒரு நீர்மக் கரைசலைப் பிரிக்கும் முறை. கடல்நீரைக் காய்ச்சி வடிக்க உப்பு வாலையில் தங்கும்.

3. இதன் வகைகள் யாவை?

1. சிதைத்து வடித்தல் - நிலக்கரி.
2. பகுத்துவடித்தல் - நிலக்கரித்தார்.
3. வெற்றிட வடித்தல் - உயர்வெப்ப நிலையிலுள்ள நீர்மத்தைப் பிரித்தல்.
4. நீராவி வடித்தல் -அனிலைன்.

4. உலர் வடித்துப் பகுத்தல் என்றால் என்ன?

ஒரு கெட்டிப் பொருளை வெப்பப்படுத்த ஆவியாகும். அதைச் சுருக்க மீண்டும் அது நீர்மமாகும். எ-டு. கால்சியம் அசெடேட்டை உலர் வடித்துப் பகுக்க அசெடோன் கிடைக்கும்.

5. பகுத்துவடித்தல் என்றால் என்ன?

இரண்டிற்கு மேற்பட்ட கலவாத நீர்மங்கள் சேர்ந்த கலவையை, அந்நீர்மங்களின் வேறுபட்ட கொதிநிலைகளில் பகுத்துப் பிரித்தல். எ-டு, பெட்ரோலியம்.