பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையனுபவம் §§ அருச்சுனன் செய்த சூ ளு ைர க் கு அஞ்சி துரியோதனன் சயத்திரதனை நிலவறையுள் மறைத்து வைத்துப் பாதுகாக்கின் ருன் கண்ணன் தன் திருவாழி யால் பகலவனை மறைக்க, பொழுது சாய்ந்தது என்று கருதிக் கெளரவர்கள் சயத்திரத ைவெளிக் கொணர் கின்றனர். கண்ணன் ஆணையால் அருச்சுனன் கன தொடுத்துச் சயத்திரதனைக் கொல்லுகின்ருன். கண்ணன் திருவாழியை விலக்கப் பகலவன் காணப்பெறுகின் ருன். சேனையிலுள்ளார் அனைவரும் வியப்பெய்துகின்றனர். இந்நிலையில் துரியோதனன் சினங்கொண்டு சில கூறிச் சேனையுடன் .ெ ச ன் று போர் தொடங்குகின்ருன். சினத்துடன் துரியோதனன் பேசுவதாகவுள்ள மேற் குறிப்பிட்ட பாடலைச் சூழ்நிலையை அறிந்து படிக்குங் கால் அஃது அறிவு நிலையைத் தொடாமல், உணர்வு நிலையைத் தொடுவதை அறிக. நம்மிடம் ஒட்ட உணர்தல் (empathy) என்ற ஒருவகை உண்ர்ச்சிநிலை தோன்றி துரியோதனின் மன நிலையையே உண்டாக்கி விடுகின்றது. ஒட்ட உணர்தல் என்பது, தன்னைப் பிறராகவே கருதி உணரும் நிலையாகும். ஈண்டு நாம் நம்மை துரியோதனனுகவே கருதுகின்ருேம் அன்ருே? எனவே, உணர்வு நிலையைத் தொடும் பாடல்கள் கவிதையனுபவத்தை நம்மிடம் மிகுவிக்கின்றன. [3] ஏதோ ஒரு வகையான உண்மையை அடிப் படையாகக் கொண்டு செஞ்சொற்களால் உள்ளங் கவரும் முறையில் உயர்ந்த கவிதையை உண்டாக் குபவனே கவிஞன். இளங்கோ ஒரு கவிஞன்; கம்பன் ஒரு கவிஞன், சேக்கிழார் ஒரு கவிஞர். உலகிற்கே மாபெரும் உண்மைகளை உணர்த்திய வள்ளுவன் ஒரு