பக்கம்:அறுந்த தந்தி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கினி சாட்சி 117

விடு மாற்றிக்கொண்டு போவதற்குக் காரணம் இன்ன தென்று அவருக்குத் தெரியும். பரமேச்வரையர், ராமசாமி ஐயர் இருவரும் பரஸ்பரம் அன்புடனும் மரியாதையுட லும் பழகுகிறவர்கள். தம்முடைய அந்தஸ்து பரமேசு வரையாைவிடத் தாழ்ந்தது என்ற எண்ணத்தினுல் ராம சாமி ஐயர் அவரை வெளியிடங்களிலே சக்தித்துச் சல்லா பம் செய்வதில்லை. அறியாதவரைப் போலவும் இருப்பவ ால்ல. பரமேசுவரையரோ அவர் அப்படி இருப்பதை அடக்கமான சுபாவம் என்று கினைத்துக்கொண்டார். 'ஒட்டலில் வேலை செய்யும் மனிதருக்கு எத்தனே அடக்கம், என்ன அன்பு, என்ன உபகார சிங்தை!’’ என்று அவர் வியப்பார். ராமசாமி ஐயரால் அவருக்குப் பலவகை யில் உபகாரம் உண்டு. -

ராமசாமி ஐயர் தம் மனேவியிடம் பரமேசுவரையர் திர் மானத்தைத் தெரிவித்தபோது அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. 'அந்த அம்மாமியிடம் போய்க் காலில் விழுந்து கெஞ்சுகிறேன். நான் ஏதாவது தப்புப் பண்ணி யிருந்தால் பொறுத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள் கிறேன். குழந்தையைப் பார்க்காமல் நமக்கு எப்படிப் போது போகும்? அவர்கள் என்ன சட்டம் வேண்டுமானலும் போடட்டும்; நாம் குழந்தைக்கு ஒன்றும் கொடுக்கவேண் டாம் ; தொடக்கூடவேண்டாம். கண்ணுல் பார்த்துக்கொண் டும் அதன் வார்த்தைகளைக் காதால் கேட்டுக்கொண்டும் இருந்தாலே போதும்...என்ன சொல்கிறீர்கள்? போய்க் கேட்கட்டுமா?’ என்ருள் ஜானகி.

ாாமசாமி ஐயர் மனம் உருகியது. அவள் அன்பு கம் அன்பையும் மிஞ்சி நிற்பதை உணர்ந்தார். தினந்தோறும் அவளே பார்வதியின் துஷனேகளை வாங்கிக் கட்டிக்கொள் வாள். ஆனலும் இப்போது அதை மறந்து அவள் காலில் போய் விழத் தயாராக இருக்கிருள். அன்பின் அதிசய சக்தி எப்படியெல்லாம் வேலை செய்கிறது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/124&oldid=535363" இலிருந்து மீள்விக்கப்பட்டது