பக்கம்:அறுந்த தந்தி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையும் கத்திரிக்காயும 165

வும் இருக்கவேண்டும் என்பது அவனுடைய எண்ணம். ந்த எண்ணம் ஒன்றும் சரியானபடி கிறைவேருமையால் கவலையோடு இருந்து வருகையில் ஒரு நாள் ஒரு பெரிய வர் அவனிடம் வர்தார். அவன் முகக்குறிப்பைக் கண்டு, ஹே மகாராஜ, நீ கவலைப்படாதே. உன் மருமகன் உன் நாட்டைத் தேடிக்கொண்டு வருவான். அழகு, கிவபக்தி, அறிவு என்னும் மூன்று யோக்கியதையை அவனிடம் எதிர்பார்க்கிருய். உலகத்தில் எல்லாம் ஒருங்கே சேர்வது துர்லபம். ஆகையால் உன்னுடைய மருமகனுக்கு அந்த மூன்றில் இரண்டு இருக்கும். அதனுல் குறை ஒன்றும் இல்லே. உன்னுடைய புதல்வி அவனே வசப்படுத்திக் கொள்வாள்” என்று சொல்லிப் போய்விட்டார். அது முதல் அவன் ஒருவாறு கவலை நீங்கிக் கடவுளின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டுத் தன் மகளுக்கேற்ற கணவன் வரும் நாளை எதிர்பார்த்துக்கொண் டிருந்தான். பெரியவர் சொன்ன செய்தியை அறிந்த சிவகாமசுந்தரியும் தன் மணுளன் இன்று வருவான், காளை வருவான் என்று எதிர் பார்த்துக்கொண்டு இருக்தாள்.

இப்படியாக அவர்கள் எதிர்பார்த்துக்கொண் டிருக் கிற காலத்தில், மகிஷ ரதத்தில் வரும் ராஜகுமாரன் அந்த ஊருக்கு வந்து சேர்ந்தான். அவனே மகானுகவும், சிவபக்த சிரோமணியாகவும் எண்ணிய ஜனங்கள் சைவசீல ணுக்கு அவன் வாவைத் தெரிவித்தார்கள். இவ்வரசன் அந்த மகிஷ ரத ராஜகுமாரனே எதிர்கொண்டழைத்து உபசரித்தான். அவனே யார் வீட்டிற்கும் செல்லாமல் எங்கும் தங்காமல் போய்க்கொண்டே இருப்பவனுகையால் அரண்மனேக்குச் செல்லவில்லை. அரசன் மாத்திரம் வந்து பார்த்துவிட்டு அரண்மனை சென்று தன் குமாரியை அங்க ராஜகுமாரனப் பார்த்து வரும்படி அனுப்பினன்.

வண்டி மெதுவாகப் போய்க்கொண் டிருந்தது. அாச லுக்குரிய பூங்காவனத்துக்குப் பக்கத்தில் உள்ள சாலே வழியே ப்ோகும்போது இங்கிருந்து ராஜகுமாரி தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/172&oldid=535411" இலிருந்து மீள்விக்கப்பட்டது