பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii தொகுதிகளில் வெளியிடும் அரிய பணிக்குச் சிரவையாதீனம் திட்டமிட்டு ஆவன செய்துவருகிறது. சமயக் கொள்கை. வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகள் முருகப்பெருமானை வழிபடுகடவுளாகக் கொண்ட கெளமாரர். தத்துவரீதியில் மெய்கண்டாரின் சைவசித்தாந்தத்தைப் பெரும்பான்மையும் சங்கரரின் அத்வைதத்தைச் சில இடங்களிலும் ஏற்றுக்கொள் பவர். சூரியன், சிவபெருமான், சக்தி, திருமால், விநாயகன் முருகன் என்னும் அறுசமய வடிவங்களும் ஒரே பரம் பொருளின் பல்வேறு பண்புகளை உருவகப் படுத்தும் கற்பனைகள் என்பதும் இவற்றுள் எதனை வழிபட்டாலும் அவ் வழிபாட்டை ஏற்றுப் பயன்தரும் பரம்பொருள் ஒன்றே என்பதும், அப்பரம் பொருள் பெயரோ வடிவமோ இல்லாத ஒன்று என்பதும் இவருடைய அடிப்படைக் கொள்கை ஆகும். ஒரே தெய்வ உபாசனையில் உறுதியாக நின்றால்தான் சமரசம், சமயாதீதம் ஆகியநெறிகள் தாமே இயல்பாக வரும் எனப் பல சாத்திர நூல்களில் தெளிவாக விளக்கியுள்ளார். வேறுபெயர்களும் காரணங்களும் வண்ணம், வகுப்பு, திருப்புகழ் ஆகிய சந்தப்பாடல்களை மிகச் சிறப்பாக இயற்றுவதில் இணையற்று விளங்கியதால் இவர் 'வண்ணச்சரபம்", "திருப்புகழ்ச் சுவாமிகள்" எனவும், முருகப்பெருமானின் அடியாராக விளங்கியமையின் "முருக தாசர்' எனவும், உடல் முழுவதும் திருநீறு பூசி, காவிச் சிற்றாடை அணிந்து, விரிந்த தலைமுடி, உருத்திராக்க மாலை கைத்தண்டம் ஆகியவற்றோடு தோற்றமளித்ததால் தண்டபாணிசுவாமிகள்" எனவும் வழங்கப்பட்டார். தொடர்புடைய புலவர் பெருமக்கள் வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், மகாவித்துவான் பிள்ளையவர்கள், பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர்,காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியார், வெண்பாப்புலி பிச்சுவையர், ஞான சித்தர்,