பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்மன் & 227

மனதையிழந்துவிட்டு காவியத்தின் நோக்கத்தில் கவனம் பிசகாது இருத்தல் வேண்டும்.

பல ஆயிர வருடக்கணக்கில் புழக்கத்திலிருக்கும் இந் நூல்களில் பின்னால் இலக்கிய அழகிற்காக என்ன சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எது மெய்யாகவே நிகழ்ந்தன என்று பிரிப்பது சாத்யமில்லை. நான் சொல்வது யாதெனில் காவியத்தின் சம்பவக் கோர்வைக்கு சிதை வில்லாமல் அதன் தருமத்துக்கு ஒவ்வி வந்தால் ஏற்றுக் கொண்டால் என்ன தப்பு? செய்யத்தகாத பாவத்தை செய்து விட்டோமா? என் தாயார் ஒன்று சொல்வார்: “பிடித்தால் சாப்பிடு, பிடிக்காவிட்டால் கடித்து விழுங்கு.”

உண்மையின் நியதி அப்படித்தான்.

ரமணமகரிஷி பூத உடலை நீத்த அன்று இரவு நக்ஷத்ரங்களிடையே ஒரு ஜோதி மிதந்து சென்றதாம். இந்தத் தகவலை ‘ஹிந்து'வில் நான் படித்தேன்.

அரவிந்தர் உயிர் அடங்கியபின் மூன்று நாட்களுக்கு அவர் தேக காந்தி குறையவேயில்லை.

இதற்குத் தினசரிப் பேப்பர்களைத் தவிர ஆசிரமத்தில் சாrவிகளே இருக்கிறார்கள்.

ஆனால் காலகதியில் இந்த மெய்ச் சம்பவங்களே வதந்தி களாகவும், பிறகு கற்பனையலங்காரங்களாகக் கருதப்பட்டு விடும்.

உண்மையை அளப்பதற்கு என்ன கஜக்கோல் இருக்கிறது? -

தாய்க்கு குழந்தை ராமகிருஷ்ணரிடம் எப்படி ஏங்கிற்றோ அதே போல், கண்ணப்பன் சிவன்மேல், தாய்மை யில் தவித்தான். அவனைத் தன் பக்கம் இழுக்க வேண்டு