பக்கம்:அழகர் கோயில்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

178 அழகர்கோயில் கைதனிலே பாசிபந்து கரியமால் வண்ணள் கணையாழி தானணித்து இடுப்பிலே ஒட்டியாணம் என் அய்யனுக்கு இருபுறமும் பொன்சதங்கை காப்புக் கொலுசுமிட்டார் கரியமாலுக்கு காலில் பாடகமிட்டார்"26 என்று தசாவதார வர்ணிப்பு பாடுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணாவநாரன் வர்ணிப்பு இந்நிகழ்ச்சியினை, "முத்தணிந்த குல்லாவைச் சுந்தரராஜனுக்கு முடிமேல் புனைந்தார்கள் நெற்றியில் பொன் நாமமிட்டார் நீலமேகத்திற்கு நீலமுருகு மணிந்தார் வயிரக்கடுக்களிட்டார் பச்சைமால் தனக்கு மார்பில் பதக்கமிட்டார்27 என வருணிக்கும். இதே நிகழ்ச்சியைப் பெரிய அழகர் வர்ணிப்பு. "முந்தியசவ் வாததனால் மோகினி சொரூபனுக்கு முன்முகத்தில் பொட்டுமிட்டு சார்ந்த மரகதத்தால் சங்காழிக் கையனுக்கு தான்மேல் முருகுமிட்டு வார்த்த மாணிக்கமதால் மாமுகில் வண்ணனுக்கு வண்டிக் கடுக்கனிட்டு வைத்த கணையாழிதனை மரகத மேனிக்கடவுள் 128 மணிவிரலின் மேலணிந்து 2 என வருணித்துப் பாடுகின்றது. காட்டாமல் ‘அலங்கரிந்தல்' என்ற ஒரே நிகழ்ச்சியைப் பலபட வருணிக்கும் பாங்கு, பெருங்கவிஞர்களைப்போல ஒரு தொழிலுக்குப் பல வினைச் சொற்களைப் பயன்படுத்தித் தம் சொல்வளத்தைக் 'இடுதல்' என்ற ஒரே வினைச்சொல்லையே பயன்படுத்தும் முறை, தாமறிந்த கொப்பு, முருகு, வண்டிக்கடுக்கன் ஆகிய அணிகளின் பெயர்களையே கூறல், ஓசை வரம்பின்றி வேறு மரபிலக்கண வரம் பமையாமை - இவையனைத்தாலும் பாகவத அம்மானைப் பாடலும் வர்ணிப்புப் பாடல்களும் ஒரே வகையான நடை அமைப்பினை உடையனவாய் இருப்பதை உணரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/185&oldid=1468058" இலிருந்து மீள்விக்கப்பட்டது