பக்கம்:அழகர் கோயில்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

180 அழகர்கோயில் செய்திகளும், சில பாத்திரப் பெயர்களும் நாட்டுப்புற மக்கள் அறியா தவையே. இவற்றை விரித்து விளக்கிக்கூறும் செவ்வைச்சூடு வாரின் பாகவதம் இலக்கியப் பயிற்சி உடையவர்களே - உணர்ந்து, சுவைக்கும் தரமுடையதாகும். நாட்டுப்புற மக்களும், நாட்டுப் புறக் கவிஞர்களும் எழுந்திலக்கியப் பயிற்சியும், யாப்பு அறிவும் பெறாதவர்கள். அவர்கள் பாகவதத்தை நேரடியாகப் படித்துணர்ந்து சுவைக்கவியலாது. சங்கரமூர்த்திக்கோனாரின் பாகவத அம்மானை பாகவதத்தின் ஒவ்வொரு பாடலையும் நாட்டுப்புறமக்கள் கேட்டுச் சுவைக்கும் வண்ணம் மிக எளிமையாக்கியதோடு, இடையிடையே சில நிகழ்ச்சிகளை நாட்டுப்புறக் கவிதை நடையில் விரித்தும் கூகிறது. எனவே செவ்வைச்சூடுவாரின் பாகவதம் கூறும் அனைத்துச் செய்திகளும் நாட்டுப்புறக் கவிஞர்க்கும் மக்களுக்கும் பாகவத அம்மாளை வழியாக எளிதிற் கிடைத்திருக்கின்றன. செவ்வைச்சூடுவாரின் பாகவதத்திற்கும் நாட்டுப்புறக் கவிஞர்களும் கும் இடையில் ஏற்பட்ட இடைவெளியினைப் பாகவதஅம்மானை பாலமாக நின்று இணைத்திருக்கின்றது. இதன்வழி, வர்ணிப்பு ஆசிரியர்கள் தங்கள் கதைச் செய்திகளைப் பாகவத அம்மானை யிலிருந்தே எடுத்திருக்கிறார்கள். எனவேதான் வர்ணிப்புப் பாடல் களெல்லாம் பாகவத அம்மானையைப் போல் ( வைணவச் சார்புடை யனவாகவே) பெருகின என்று கருதலாம். சுருக்கமாகக் கூறுவ தானால் 'உயர்ந்தோர்' இலக்கியத்தை வடிவமாற்றத்தால் 'மக்கள்' இலக்கியமாக்கும் ஒரு முயற்சியே பாகவத அம்மானை எனலாம். இவையனைத்தும் பாகவத அம்மானை 'வர்ணிப்புகளின் மூலம், என்ற கருத்தினை உறுதிசெய்கின்றன. இருப்பினும் வர்ணிப்புத் திறனை முக்கியப்படுத்தும்நிலை பாகவத அம்மானைக்குமுன் தமிழில் இருந்ததா என்பதையும் ஆராயவேண்டும். 8.11. கரவிய மரபு: சங்க இலக்கியங்களில் ஆற்றுப்படை நூல்களிலும், நீண்ட அகப்பாடல்களில் கருப்பொருள் விளக்கமாகவும் வருணனைகள் இடம்பெற்றுள்ளன. எனினும் தமிழ்க் காவியங்களிலேயே வருணனை பெருமளவு வளர்ந்துள்ள நிலையைக் காணமுடிகிறது. மலை, ஆறு, நாடு, வளநகர், பருவம், இருசுடர்த் தோற்றம் இவையெல்லாம் காவியத்தில் இடம்பெறவேண்டும் என்பர் தண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/187&oldid=1468060" இலிருந்து மீள்விக்கப்பட்டது