பக்கம்:அழகர் கோயில்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

276 அழகர்கோயில் 5. தேர்: ஆடி மாதம் ஒன்பதாம் திருநாளில் இறைவன் ஏறிவரும் திருத்தேரின் பெயர் 'அமைத்த நாராயணன்' என்பது ஒரு கல் வெட்டு தரும் செய்தியாகும்.19 6. திருளிஜாக்கள் : முதலாம் குலசேகரபாண்டியன் காலத்தில் கப்பலூருடையான் முளையதரையனாள சீராமன் உய்யவந்தான் என்பவன் ஆடி, ஐப்பசி. மார்கழி மாதங்களில் நடைபெறும் திரு நிழாக்களில் பிரா பணர்களுக்கு உணவளிக்க நிலந்தமளித்த செய்தி ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கிறது 20 சகம் 1578 (கி. பி. 1656) இல் எழுந்த ஒரு கல்வெட்டினால் இக்கோயிலில் ஆடித்திருவிழா 10 நாட்கள் நடந்த செய்தியையும், பத்து நாட்களும் 'இயல்' (நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தின் முதலா யிரப்பகுP) ஓதப்பெற்றதையும் அறியமுடிகிறது. 21 7. சிறப்பப் பூசைகள் : சுந்தரபாண்டியன் மண்டபத்திலுள்ள ஒரு நவ்வெட்டு, பாண்டிய மன்னன் ஒருவன், தன் அண்ணாழ்வி (அண்ணன்) பிறந்த திரு நட்சத்திரமான உத்திராடத்தன்று, ஒவ்வொரு மாதமும் இறை வனையும் இறைவியையும் சுந்தரபாண்டியன் மண்டபத்திற்கு எழுந் தருளச்செய்ய நிவந்தம் அளித்ததைக் குறிப்பிடுகிறது 22 மற்றொரு கல்வெட்டு மாறவர்மனான ஒரு பாண்டிய மன்னன் தன் அண்ணாழ்வி சொக்காண்டர் பிறந்த திருநட்சத்திரமான மீன மாதத்துச் சதையத்தன்று, சில பூசைகளை நடத்த நிவந்தமளித்த செய்தியைத் தருகிறது 23 திருமல்லிநாட்டுத் தடங்கண்ணிச் சிற்றூர் குருகுலத்தரை யனான சிற்றூருடையான் சோரன் உய்யவந்தான் என்பவன், 'குருகுலத்தரையன் சந்தி' எனும் பூசைக்கு நிலமளித்த செய்தியை ஒரு கல்வெட்டால் அறிகிறோம். மற்றொரு கல்வெட்டு, அகளங்க நாடாள்வானான அழகன் என்பவன் தன்பெயரில் நிறுவிய, 'அரச, மிக்காரன் சுற்றி' எனும் பூசைக்கு சுந்தரத்தோள் விளாகம் எனும் சிற் றூரை நிவந்தமாக அளித்ததைக் கூறுகிறது. 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/283&oldid=1468173" இலிருந்து மீள்விக்கப்பட்டது