________________
அழகர் வர்ணிப்பு 289 10 துளக்கமதாய்க் கொடுத்து மூன்று காலவேளை தொகுதிப்படி முறையாய் குட்டிமுட்டி கோழி சேவல் அட்டியில்லாமல் தரக் கோட்டை வாசல் பக்கமதில் மற்றிணையில்லாத கருப்பன் சகலமும் வாங்கிப் படிவாசல் காத் திருக்கார் குருதிகொண்ட வளநாட்டில் கள்ளருட வம்சம் குலவிருத்தி யாகுமென்றார் பட்டர் முதல் ஆண்டாரும் நாட்டார்க்குரைக்க பணித்து நமஸ்கரித்து 15 கட்டணம் தவறாமல் நடக்கிறோமெந்த தாளும் ஒருவளமே என்றுரைத்து எல்லோரும் கோவிந்தாயென்று பொய்கைக் கரைப்பட்டி ஏகினார் பட்டர் முதல் சென்று திரும்பிவரப் பரமசாமிப் பட்டரிடம் செப்புவார் செந்திருமால் வாமனரே வைகைவளம் நாளைப் பயணம் வைக்கலாம் தென் கூடலுக்கு நேம விதிப்படியே நான்கு கோட்டை வாசலுக்குள் நேமியும் பன்முறைபோய் 20 உள்கோட்டை வாசலிலே ஆழ்வார் கெருடாழ்வார் உடையாழ் வார் காவலுடன் செல்வதற்குள் மடப்பள்ளி திருப்பரிச்சி முதலாக திருமால் அவர் கானலென்றார். கருமண்டபமும் களஞ்சியம் காணிக்கைக் குடவரையும் கல்படி யோன் காவலென்றார். திருமாலுடைய தொட்டிபட்டி அயராமணி மண்டபம் சுரங்க முதலாகச் சித்தர்கள் காவலென்றார். மறுகு மலரணிந்த மாதவன் சொல்படியே வாமனன் கட்டளையில் 25 வருமலர் இணைமாற்றித் தீர்த்தமதை வழங்குகின்ற மஞ்சனை யாள் பேராக்கு பெருகும் படையொடுக்கிச் சமர்முடிந்து வந்த சித்தர் பிரான் மலையை காத்து வருவீரெல்லாம் வற்றாமல் தீர்த்தம் கலங்காமல் ஈயெறும்பு