பக்கம்:அழியா அழகு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அழியா அழகு

குகன். கோபக்கனலில் குமுறிச் சொற்குழம்பை வாரி வீசுகிருன்.

"அவன், நம்முடைய மதிப்பிற்குரிய தமையனயிற்மே என்று எண்ணவில்லை. மதிப்பும் மரியாதையும் தெரியா விட்டால் போகிறது. அச்சமாவது இருக்கவேண்டாமா? வலிமை மிக்க புலியனே ய தம்பி ஒருவன் அவனுடன் இருக் கிருன் என்ற கினேவும் இவனுக்கு இல்லை. என்ன எளிதிலே இகழ்ந்து செல்ல இயலுமா? முதலில் இந்த எல்லேயாகிய கங்கைக்கரையைக் கடந்த பிறகல்லவா அது நடக்க முடியும்? அரசராக இருந்தால் அவர்கள்மேல் வேடர்கள் அம்புவிட் டால் பாயோதோ? அவர்கள் மார்பில் தைக்காதோ?

"இந்த மண்ணுலகை ஆள்பவர்களுக்குப் பழி, பாவம். பகைாண்பு என்பவற்றை எண்ணும் இயல்பே இல்லேபோல் இருக்கிறது! கடந்ததைப் பற்றிக் கவலையில்லே. அவை யெல்லாம் கிடக்கட்டும். எனக்கு ஆருயிர்த் தோழமை என்ற பெரும் பேற்றைத் தந்த பெருமான்மேல் இவர்கள் படை யெடுத்துச் செல்வது, இந்தச் சேனேயையும் தங்கள் ஆருயி ரையும் என்னிடமிருந்து தப்புவித்துக்கொண்டு போன பிறகுதானே? அது எங்கே நிகழப்போகிறது?

"என்னுடைய உயிர்த்துணைவளுகிய இராமபிரான் தவவாழ்க்கையை ஆள. இவன் உலகத்தை ஆள்வானே? அப்படிச் செய்ய கான் விட்டு விடுவேனே? இவனே எதிர்த்து இங்கேயே வீழ்த்தாமல் என் உயிரைக் காப்பாற்றச அந்த உயிர் என்ன அமுதமா? இவனே எதிர்த்துத் தொலைத் துப் புகழ் பெற்ற பிறகுதான் மாய்வேன், தோழமை பூண்ட அவர்களோடு கானும் காட்டுக்குப் போயிருந்தால் இவர்கள் கங்கையைத் தடையின்றிக் கடந்து விடுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/122&oldid=523324" இலிருந்து மீள்விக்கப்பட்டது