பக்கம்:அழியா அழகு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1126 அழியா அழகு

அறியாத ஒருவகை வேதனை அவனே ஆட்கொண்டது. சின்ற இடத்தை விட்டு அசையாமல் மரம்போல கின்ற படியே கின்று விட்டான்.

வற்கலையின் உடையான

மாசடைந்த மெய்யான கற்கலைஇல் மதி.என்ன

நகைஇழந்த முகத்தானைக் கற்கனியக் கணிகின்ற

துயரானைக் கண்ணுற்ருன்; வில்கையினின் றிடைவீழ

விம்முற்று கின்ருெழிந்தான். '

(விம்முற்று வேதனையை மேற்கொண்டு. கின்ருெழிக் தான் - கின்றபடியே கின்றுவிட்டான்; வேறு ஒன்றும்

செய்யவில்லை.)

கின்றபடியே தன் எண்ணமெல்லாம் மாறிப் பரதனைப் பார்த்தான். அவனுக்கு இப்போது மற்ருேர் அதிர்ச்சி உண்டாயிற்று. ஆம், கண்ணே அகலத் திறந்து பார்த்தான்.

குகன் இராமபிரானேக் கண்டது முதல் அவனது திருமேனி யழகு அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தன் உள்ளத்தே அன்று முதல் அவனது படத்தை மாட்டிக்கொண்டு விட்டான், இப்போது எதிரே கின்ற உருவத்துக்கும் தன் அகத்தே வைத்துப் பூசிக்கும் உருவத்துக்கும் ஒப்புமை இருப்பது தெரிந்தது. அதனேடு. பக்கத்தில் கிற்கும் சத்துருக்கனனுடைய உருவத்தில் இலக்குவனுடைய அங்க அடையாளம் இருந்தது.'இதென்ன!

--- 1. குகைப்படலம். 29.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/134&oldid=523336" இலிருந்து மீள்விக்கப்பட்டது