பக்கம்:அழியா அழகு.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் பிழை 175

(கோவைப்பழம் போன்ற சிவந்த வாயையுடைய கைகேயியின் அரண்மனைக்கு விரைந்து சென்ருள்; கோபத் தில்ை மடித்த வாயை உடையவளாகச் சென்ருள்; பழங் காலத்தில் இராமன் கையில் இருந்த வில்விட்ட உண்டை .யின் தாக்குதலைப் பெற்ற செய்தியைத் தன் உள்ளத்தே .கினைப்பவளாகச் சென்ருள்.)

இராமன் செயலாகக்கூட அதைச் சொல்லவில்லை. அவன் கையிலிருந்த வில் உமிழ்ந்த உண்டை என்கிருன் கவிஞன். ஏதோ ஒரு கியதியால் அந்த அந்தக் காலத்தில் அந்த அந்த நிகழ்ச்சி ஒன்றன்பின் ஒன்ருக நிகழ்வது போல அது உணர்த்துகிறது.

கூனி இராமாயணக் கதையரங்கிலே தோன்றுவதை ஒரு கவியில் கம்பன் சொல்கிருன்.

அந்நகர் அணிவுறும்

அமலை வானவர் பொன்ககர் இயல்பெனப்

பொலியும் ஏல்வையில் இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல் துன்னரும் கொடுமனக்

கூனி தோன்றினுள். '

(அந்த அயோத்திமா நகரத்தை அலங்காரம் செய்யும் ஆரவாரத்தால் அது தேவர்களுடைய அமராவதி போல விளங்கிய அச்சமயத்தில், தேவர்களுக்குத் தன்பம் உண்டாக்கிய இராவணன் செய்த தீமையைப் போல் வேறு வியாரிடத்தும் சேர்வதற்கரிய கொடிய மனத்தையுடைய கூனி தோன்றினுள்.) -

1. மந்தரை சூழ்ச்சிப் படலம், 39.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/183&oldid=523385" இலிருந்து மீள்விக்கப்பட்டது