பக்கம்:அழியா அழகு.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்த மாமணி 209

தன் மகனுடைய பிரிவில்ை உயிரை நீத்துத் துறக்கத்தில் இருந்த தசரதனிடம் அப்பெருமான், "கீ போய் இராம ணுக்குச் சொல்' என்று சொல்ல, அரசருக்கரசனகிய அவன் தன் காதல் மைந்தனேக் காணும்பொருட்டு வருகிருன். அவனேக் கண்டவுடனே இராமன் அவன் மலர்த்தாள்மிசை வீழ்கிருன். அப்படி விழுந்த மைந்தனே எடுத்துத் தன் மார்பில் இறுகத் தழுவித் தன் கண்ணிரால் ஆட்டி எல்லே யற்ற களிப்புண்டாகத் துன்பங்கள் யாவும் போகச் சில் சொற்கள் புகல்கிருன்.

இங்கே கம்பன் தசரதன் கூற்ருக மூன்று பாடல் களை அமைத்திருக்கிருன். அவற்றின் முதற்பாடலே. தெளிவு தந்த காந்தத்தை உடைய பாடல். தசரதன் சொல்கிருன்: 'அப்பா, அன்றைக்குக் கைகேயி என்னிடம் வலிந்து பெற்றுக்கொண்ட வரம் என்ற கூர்மையான வேல் என் இதயத்திலே பாய்ந்தது. அது என்னேக் கொன்ற பிறகும் என்னிடமிருந்து நீங்காமல் வேதனையைக் கொடுத் துக் கொண்டிருந்தது. இப்போது அது அகன்றது. எதல்ை தெரியுமா? உன்னுடைய மேன்மையான அணிகளே அணிந்த் கறுமணம் கமழும் மார்பை நான் அணங்தேன் அல்லவா? அந்த மார்பு என்னும் காந்த மாமணி என் மார்பில் ஆழ்ந் திருந்த வேலை வாங்கி விட்டது. அதல்ை இப்போது அது போன இடம் தெரியவில்லை' என்று உவகை மீக்கூர உரைக்கிருன்,

'அன்று கேகயன் மகள்கொண்ட வரம்என்னும் அயில்வேல் இன்று காறும்என் இதயத்தி

னிடைகின்றது; என்னைக் வ.14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/217&oldid=523419" இலிருந்து மீள்விக்கப்பட்டது