பக்கம்:அழியா அழகு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழியா அழகு 53

அழகுபடுத்திவிடுகிருன். கெருப்புக்கும் தேளுக்கும் திருட .ணுக்கும் கொலேகாரனுக்கும் அஞ்சி, ஐயோ!' என்ற காம் கூவுகிருேம். கம்பன் அதே சொல்லே அழகாகப் பதித்து இராமலாவண்யத்தை நுகரும் வண்ணம் செய்து விட்டான். அதை உணர்ச்சியுலகத்துக்குரிய வண்ணச் சொல் ஆக்கி விட்டான்.

இராமனுக்கு வடிவு வேறு, அழகு வேறு என்பது இல்லை. அழகே அவனுக்கு வடிவாகி விட்டது. அதற்கு மையையும் மரகதத்தையும் மழைமுகிலேயும் மறிகடலேயுமா உவமை சொல்வது?

ஐயோ! இவன் வடிவென்பதோர்

அழியா அழகுடையான் என்பதில் கம்பன், உணர்ச்சியை உருவாக்கி கம் உள்ளத்தில் இன்ப ஊற்றைப் புகுத்துகிருன்.

இப்போது பாட்டு முழுவதையும் பார்க்கலாம்: வெய்யோன்ஒளி தன்மேனியின்

விரிசோதியின் மறையப் பொய்யோஎனும் இடையாளொடும்

இளையாளுெடும் போனன்; மையோமர கதமோ மறி

கடலோ! மழை முகிலோ! ஐயோ! இவன் வடிவுஎன்பதோர்

அழியாஅழ குடையான்!

‘இவன் வடிவு மை முதலியனவோ ஐயோ! என்று சொல்லும் வண்ணம் அழியாத அழகு படைத்தவனகிய இராமன் போனன்' என்று வாக்கியம் முடியும்,

இராமனுடைய அழகு அழியா அழகு. அது புறக் கண்ணுல் காணும் அழகாக இருந்தால் அழிந்து விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/61&oldid=523263" இலிருந்து மீள்விக்கப்பட்டது