பக்கம்:அவள்.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லூசி 421

"ப்ராப்தம் இல்லை அப்பா!" அவன் பார்வை அவர் மேல் தெகிழ்ந்தது பத்து வருடங்கள்—லேசா? பத்து வருடங்கள் என்ன, எத்தனை வருடங்களானாலும் அவர்களிடை தனி பந்தத்தை அழிக்க முடியாது. இத்தனை நாள் கழித்தும், அதன் குங்கிலியம் குபீரிடுவதை இருவரும் உணர்த்தனர்.

உன் பேர் என்ன அம்மா?"

“My name is Lucy, but Iam Janani."

இது மதுவின் ட்ரமாடிக்ஸ். மது ஒரு 'ஜாலக்' பேர் வழி. அவன் செயல்களில் எப்போதுமே ஒரு லேசுப் பொடி மணக்கும். சொக்குப் பொடி. ஒரு த்வனி பேசும். ‘இது மது' என்று. மது, சூதன்.

இந்த யெளவன வரத்தை மது எங்கே பெற்றான்? ப த் து வருடங்களுக்குக் கிள்ளியெறியும்படிக்கூட அதிகப்படி சதை? ஊஹும். நெற்றி கொஞ்சம் உயர்ந்திருக்கலாமோ? அதுகூட நிச்சயமில்லை. டேப் வைத்து அளந்தால்தான் தெரியும். உடம்பு அதே 'சிக்'. அதே சுறுசுறுப்பு. சிரித்தால் இன்னும் கன்னம் குழிந்தது. .

என் அருமை மது.

"அப்பா, உங்கள் உடம்புக்கு என்ன?”

அவர் செவி அவனை வாங்கிக் கொள்ளவில்லை. கவனம் முழுதும் அவளைத் தொடர்ந்தபடி இருந்தது. குழந்தைகளுடன் குழந்தையாய் விளையாடிக்கொண்டிருந்தாள்.

புடவை சரியாய்க் கட்ட வரவில்லை. அவளுக்கு அது பாந்தமாயுமில்லை. மதுவே கட்டிவிட்டிருப்பானோ? மார்த்துணி சரிந்து விழுவது தெரியவில்லை. அது பற்றி அவளுக்குச் சட்டையுமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/465&oldid=1497438" இலிருந்து மீள்விக்கப்பட்டது