பக்கம்:ஆடரங்கு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகாத் தியாகம்

95

அவருக்கு உதவியிருக்க வேண்டும். அந்த விஷயத்தில் ராஜாமணி அவருக்குச் சற்றும் உதவவில்லை என்பது மட்டுமல்ல; அவர் சறுக்கி விழ அதிகம் உதவினான்.

அவர் மகன் ராஜாமணியின் வாழ்க்கை...... 'சே ! அதுவும் ஒரு வாழ்க்கையா !' என்றீருந்தது இருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகளுக்கு.

அறுபத்துநாலு வருஷ வாழ்க்கையில் அவர் கண்டு அநுபவித்த சுக வாழ்வெல்லாம் ஏழெட்டு வருஷங்களுக்குமேல் இராது. அதற்குப் பிறகு வந்துபோன வருஷங்களை எல்லாம் அவர் அந்த ஏழெட்டு வருஷ இன்ப ஞாபகங்களோடுதான் ஒட்டிக்கொண் டிருக்கும்படி நேர்ந்துவிட்டது.

அவரே எத்தனையோ தரம் தம் தகப்பனாரைப்பற்றி ராஜா மணியிடம் சொல்லி யிருந்தார். "என் அப்பா நல்லவர்தாம். ஆனால் அவருடைய ஒரே ஒரு கெட்ட பழக்கம் அவர் வாழ்க்கையை மட்டுமன்றி என் வாழ்க்கையையும் பாழாக்கி விட்டது. அவர் ஸ்திரீ லோலர், அவர் அந்தக் காலத்துக்குச் சற்றுச் சிறப்பாகவே சம்பாதித்தார். சம்பளத்தைப் போல நாலைந்து மடங்கு அதிகமாகவே கடன் வாங்கித் தாசிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார். அவர் இறந்த பிறகு என் இருபது வருஷ சம்பாத்தியம் பூராவும் கொடுத்து நான் அவர் பட்ட கடன்களைத் தீர்க்க வேண்டியிருந்தது. அந்த இருபது வருஷங்களில் ஏழை இந்தியாவில் என் போல ஏழை வாழ்வு வாழ்ந்தவன் யாரும் இருக்க மாட்டான் என்பது நிச்சயம்” என்பார். கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள்.

"அந்த வறுமையில் எனக்குத் தைரியமும் ஆதரவும் தந்தது என் தாய்தான். மகாலக்ஷ்மி என்றுதான் அவளைச் சொல்ல வேனும். வேறு என்ன சொல்ல முடியும்? அவளுக்கும் கணவன் கொடுத்து விட்டுப்போன பிரசாதம் நீங்காத வியாதி ஒன்றுதான். என்ன பொறுமை! என்ன சாமர்த்தியம்......" என்பார் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/100&oldid=1523512" இலிருந்து மீள்விக்கப்பட்டது