பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

கிராமத்திற்கே வந்து சேரவேணும். அங்குள்ள ஜமீன்தாருக்கு காளிங்கராயர் என்று பட்டம். கலிங்கம் வென்ற கருணாகரன் உடன் சென்ற சிறந்த படைத்தலைவன் பரம்பனர போலும், அந்த ஜமீன்தார் அரண்மனைக் குள்ளே நான்கு ஐந்தடி உயரத்தில் இருக்கிறான், இந்த அனுமன். ஏதோ மரத்தாலாய பீடத்தின் பேரில்த் தான் சிற்பி அமைத்து நிறுத்தியிருக்கிறான்.

என்றாலும், தோற்றம் அந்த மகேந்திரமலை மேலே - முதல் முதலாக ஏறி நின்ற நிலைதான். மேரு கிரிக்கும் மீதுற நிற்கும் பெரும் மெய்யனாகக் காட்சி கொடுக்கிறான். உருண்டு திரண்ட மேனி, ஓங்கி வளர்ந்த வடிவம். நிமிர்ந்து உயர்ந்த கதை, சுருண்டு வளைந்த வால் எல்லாம் அந்த உருவத்தின் காம்பீர்யத்தை பறை சாற்றுகின்றது. அசப்பிலே பார்த்தால் சிலை என்றே சொல்ல முடியாது. நல்ல ஆஜானு பாகுவான அனுமனே எழுந்து நிற்பது போலத்தான் இருக்கும். நல்ல வடிவ அழகோடு கூடிய சிற்பச் சிலைகளும் மரத்திலே ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு - இந்தச் சிற்பமே ஒரு எடுத்துக்காட்டு.

இனித்தான் வருகிறோம் ஒரு நல்ல செப்புச் சிலையைக்கான விசுவரூபம் என்றால் இது வரை பெரிய உருவம் என்று தானே எண்ணி வந்தோம். ஆனால் இப்போதுக் காணும் விசுவரூபம் உண்மையிலே எட்டுத் திசையும், பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டி நிற்கும், பெரிய உருவம் தான். மூர்த்தியினுடைய பெயரே 'திரிநேத்ர சதுர்புஜ அனுமார்' என்பதாகும்.

மூன்று கண்களுடனும், பத்துக் கைகளுடனும் இவர் காட்சி தருவார் என்பதைப் பெயரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். நமது தெய்வங்களிலே வலிமிகுந்தவர்கள் சிவன், விஷ்ணு, தேவேந்திரன், யமன் முதலியவர்கள் தான். இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே